கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
கரூரில் நேற்று மாலை தவெக பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்தனர்.
இவர்களில் மூன்று பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கரூரைச் சேர்ந்த ஹேமலதா என்ற தாயும், கரூர் தனியார் பள்ளியில் பயிலும் அவரது குழந்தைகளான சாய் லக்ஷனா, சாய் ஜீவா ஆகியோரும் உயிரிழந்தனர்.
பிரச்சாரம் நடந்த இடத்தில் பொதுமக்கள் அணிந்து வந்த ஆயிரக்கணக்கான செருப்புகள், துண்டுகள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவை சிதறிக் கிடக்கின்றன.