கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏராளமானோர் மயக்கமடைந்த நிலையில் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கும் கரூர் அரசு மருத்துவமனைக்கும் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
30க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்த நிலையில் தற்போது வரை 13 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வருகின்றன. பத்துக்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளனர். 3 குழந்தைகள் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின், கரூர் மருத்துவமனையை தயார் நிலையில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் கேட்டறிந்துள்ளார். அமைச்சர்களை மருத்துவமைக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கரூர் விரைந்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கிறார்.
முதல்வர் உத்தரவின் பேரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் அரசு மருத்துவமனைக்கு வந்து அங்குள்ள நிலைமையை பார்வையிட்டு மருத்துவர்களிடம் கேட்டு அறிந்து வருகிறார்.
ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதமும் கரூர் விரைகிறார்.