விஜய் பிரச்சார கூட்டத்தில் இதுவரை 26 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
கரூர் அரசு மருத்துவமனையில் மொத்தமாக 74 படுக்கைகள் உள்ளன. இதில் தாய் வார்டில் உள்ள 30க்கும் மேற்பட்ட படுக்கைகளும் நிரம்பியுள்ளன. ஐசியு வார்டும் முழுவதுமாக நிரம்பியது.
இன்னும் மயக்கமடைந்தவர்கள் தொடர்ந்து அழைத்து வரப்படுகின்றனர். கரூர் அரசு மருத்துவமனையில் இடம் இல்லாததால் சுற்று வட்டாரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
அதேசமயம் கரூர் அரசு மருத்துவமனையில் முதல் ஷிப்ட், இரண்டாம் ஷிப்ட் முடித்துவிட்டு போனவர்கள், விடுமுறையில் சென்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் சிக்கி பலர் உயிரிழந்திருப்பது ஒட்டுமொத்த தமிழக மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.