ADVERTISEMENT

பெரம்பலூர் மக்களிடம் மன்னிப்பு கேட்ட விஜய்

Published On:

| By Kavi

பெரம்பலூர் மக்களை சந்திக்காமல் சென்றதற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மன்னிப்பு கேட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 13) மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கிய விஜய் திருச்சி, அரியலூரில் பிரச்சாரம் செய்தார். எனினும் திட்டமிட்டபடி பெரம்பலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள முடியவில்லை.

ADVERTISEMENT

போலீசாரின் கட்டுப்பாடுகள், கூட்ட நெரிசல் காரணமாக பெரம்பலூர் நிகழ்வை ரத்து செய்தார்.

இதனால் பெரம்பலூர் வானொலி திடங்களில் நள்ளிரவு 12.30 மணி வரை திரண்டிருந்த மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் விஜய்யை கண்டிக்கும் வகையில் பெரம்பலூரில் பல பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. .

ADVERTISEMENT

இந்தசூழலில் நாகையில் இன்று (செப்டம்பர் 20) தனது இரண்டாவது பிரச்சாரத்தை தொடங்கிய விஜய், “நான் கடந்த வாரம் திருச்சிக்கும், அரியலூருக்கும் சென்று மக்களை சந்தித்தேன். அப்போது பெரம்பலூரும் போக வேண்டியது.

ஆனால் சில விதிமுறைகள் போட்டார்கள். ஒரு கட்டத்தில் இந்த பேருந்தால் நகரக்கூட முடியவில்லை. அதன் பிறகு, ஒரு கட்டத்துக்கு மேல் பேசகூடாது. அதை விடுங்க… இந்த நேரத்தில் பெரம்பலூர் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

ADVERTISEMENT

சீக்கிரம் நான் உங்களை தேடி நான் வருவேன். அது உறுதி” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share