‘அட்டக்கத்தி’ படம் ரிலீஸ் ஆக வெற்றி மாறன் செய்த உதவி!

Published On:

| By Selvam

Vetrimaaran helped for attakathi release

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். இவரது முதல் படமான அட்டக்கத்தி 2012-ஆம் ஆண்டு வெளியானது. தினேஷ், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர். சி.வி.குமார் அட்டக்கத்தி படத்தை தயாரித்தார்.

அட்டக்கத்தி படத்தின் அனைத்து பணிகளும் முடிந்தாலும் இப்படத்தை விநியோகஸ்தர்கள் யாரும் வாங்கவில்லை. இந்தநிலையில், பா.ரஞ்சித் உதவி இயக்குனராக பணியாற்றிய இயக்குனர் வெங்கட் பிரபு ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு இப்படத்தை திரையிட்டு காண்பித்தார். அப்போது இயக்குனர் வெற்றி மாறனும் இப்படத்தை பார்த்துள்ளார். Vetrimaaran helped for attakathi release

படத்தை பார்த்ததும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தாங்களே அட்டக்கத்தி படத்தை வெளியிடுவதாக அறிவித்தனர். இதற்கு முக்கியமான காரணம், வெற்றிமாறனின் சிரிப்பு தான். படம் ஆரம்பித்ததில் இருந்து இறுதி வரை வெற்றி மாறன் விழுந்து விழுந்து சிரித்துள்ளார்.

இதுதொடர்பாக, இயக்குனர்கள் ராம், வெற்றி மாறன் ஆகியோர் எஸ்.எஸ்.மியூசிக் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இந்த விஷயத்தை பகிர்ந்துள்ளனர்.

ராம் கூறும்போது, “வெற்றி மாறனின் சிரிப்பு தான் அட்டக்கத்தி படம் வெளியானதற்கு காரணம் என்று ரஞ்சித் என்னிடம் சொல்லியிருக்கிறார்” என்றார்.

அப்போது வெற்றி மாறன், “அட்டக்கத்தி படம் நன்றாக இருந்தது. எனக்கு மிகவும் கனெக்ட் ஆனது. சென்னையில் தான் நான் வளர்ந்தேன். சென்னையில் நாம் வாழ்ந்த விஷயங்களை யாரும் படமாக காட்டவில்லை. அதனால் படம் பார்க்கும் போது சிரித்தேன்.

படம் பார்த்த அடுத்த நாள் தயாரிப்பாளர் ஞானவேல் என்னை சந்தித்து, ‘படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தை நான் வாங்கிவிட்டேன். நானாகவே இந்த முடிவு எடுத்தேனா அல்லது உங்களது சிரிப்பால் படத்தை வாங்கினேனா என்று தெரிவியவில்லை’ என என்னிடம் கூறினார்” என்று தெரிவித்தார். Vetrimaaran helped for attakathi release

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share