ஒரே குரூப்பில் இந்தியா – பாகிஸ்தான்… வெளியானது முழு அட்டவணை!

Published On:

| By christopher

indvspak in same pool at 2025 Hockey Mens JWC

சென்னை மற்றும் மதுரையில் நடைபெறும் ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் இடம்பெற்றுள்ளன. indvspak in same pool at 2025 Hockey Mens JWC

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா – பாகிஸ்தான் மோதல் தொடர்ந்து வரும் நிலையில், கிரிக்கெட்டில் இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்கள் நடைபெற்று பத்தாண்டுகளை கடந்துவிட்டது.

ADVERTISEMENT

சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய பஹல்காம் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து இந்திய ராணுவம் மேற்கொண்ட ’ஆபரேசன் சிந்தூர்’ இரு நாடுகள் உறவை மோசமாக்கியது.

இதற்கிடையே தான் ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி 2025 தொடருக்கான முழு அட்டவணையை FIH தலைவர் தையாப் இக்ராம் இன்று (ஜூன் 28) வெளியிட்டார்.

ADVERTISEMENT

சென்னை மற்றும் மதுரையில் இந்தாணடு சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது.

மொத்தம் 24 அணிகள் பங்கேற்கும் நிலையில், ஒவ்வொரு குரூப்பிலும் 4 அணிகள் என ஏ முதல் எஃப் வரை 6 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

நடப்பு சாம்பியன் ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் குரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளன.

குரூப் பி-யில் சுவிட்சர்லாந்து மற்றும் சிலி ஆகியவற்றுடன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன.


குரூப் ஏ
ஜெர்மனிதென் ஆப்பிரிக்கா கனடாஅயர்லாந்து
குரூப் பிஇந்தியாபாகிஸ்தான்சிலிசுவிட்சர்லாந்து
குரூப் சிஅர்ஜென்டினாநியூசிலாந்துஜப்பான்சீனா
குரூப் டிஸ்பெயின் பெல்ஜியம்எகிப்துநமீபியா
குரூப் இநெதர்லாந்துமலேசியாஇங்கிலாந்துஆஸ்திரியா
குரூப் எஃப்பிரான்ஸ்ஆஸ்திரேலியாகொரியாபங்களாதேஷ்

முன்னதாக உரி பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு விசா சிக்கல்கள் காரணமாக 2016 ஆம் ஆண்டிலும் பாகிஸ்தான் அணியால் இந்தியாவில் நடந்த போட்டியில் பங்கேற்க முடியவில்லை. இதனால் போட்டி மலேசியாவிற்கு மாற்றப்பட்டது.

தற்போது இரு நாடுகள் இடையே மேலும் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், இரு நாடுகளும் ஒரே அணியில் இடம்பெற்றுள்ளது, பல்வேறு சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share