முதுபெரும் இடதுசாரித் தலைவர் நல்லகண்ணு காலமானார்

Published On:

| By Mathi

CPI Nallakannu Health

முதுபெரும் இடதுசாரித் தலைவரும், எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்தவருமான ஆர். நல்லகண்ணு (101), சென்னையில் இன்று (பிப்ரவரி 25) உடல் நலக்குறைவால் காலமானார்.

சுதந்திரப் போராட்ட வீரரான நல்லகண்ணு சென்னையில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி அவருக்குத் திடீரென மூச்சுத்திணறல் மற்றும் உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டன. இதனைத் தொடர்ந்து, அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ADVERTISEMENT

மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட நுரையீரல் தொற்றுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி இன்று அவர் இயற்கை எய்தினார்.

இவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share