திருச்சி சிவா, தமிழிசை, திருமாவளவன், சீமான் சந்திப்பு!

Published On:

| By Kavi

அரசியல் கட்சித் தலைவர்களான திருச்சி சிவா, தமிழிசை, திருமாவளவன், சீமான் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறுகிறது. இந்த தேர்தல் திமுக, அதிமுக, நாதக, தவெக என 4 முனை போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சியினரின் தலைவர்கள் முதல் நிர்வாகிகள் வரை ஒவ்வொருவரின் நகர்வும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் நிலையில், இன்று திருச்சி ஏர்ப்போர்ட்டில் எடுப்பட்ட புகைப்பட பேசு பொருளாகியிருக்கிறது.

வெவ்வேறு நிகழ்ச்சிகளுக்காக திருச்சி விமான நிலையம் வந்த விசிக தலைவர் திருமாவளவன், திமுக துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் சந்தித்துக்கொண்டனர்.

ADVERTISEMENT

அப்போது அனைவரும் இருக்கும் வகையில் திருச்சி சிவா செல்பி எடுத்துள்ளார்.

இந்த செல்பியை திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ADVERTISEMENT

அதில், “சற்று முன் திருச்சி விமான நிலையத்தில்.. ‘முறுவலிக்கும் முரண்கள்’ . அண்ணன் திருச்சி சிவா எடுத்த ‘செல்ஃபி’.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கொள்கை ரீதியாக இவர்கள் நான்கு பேரும் நான்கு துருவங்களாக இருந்தாலும் ஒரு பொது நிகழ்வில் சந்திக்கும்போது காட்டிய பரஸ்பர மரியாதை மற்றும் புன்னகை, அரசியல் வேறு, நட்பு வேறு என்ற தமிழகத்தின் உயர்ந்த அரசியல் நாகரிகத்தைக் காட்டுவதாகப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share