திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுகிறாரா வேல்முருகன்?

Published On:

| By Kavi

திமுக கூட்டணியில் தொடரலாமா? வேண்டாமா? என்பது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தொடர்ந்து ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்.

2019 மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்தார் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன். அதைத்தொடர்ந்து 2021சட்டமன்றத் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்ந்தது. வேல்முருகனுக்கு ஒரு சீட் கொடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

2024 மக்களவைத் தேர்தலில் வேல்முருகன் கட்சிக்கு எந்த தொகுதியும் கொடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகள் வேண்டும் என்று திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் வேல்முருகன் வலியுறுத்தி வந்தார். ஆனால் திமுக, ஒரு சீட் தருகிறோம். நீங்கள் கேட்கும் தொகுதியையே கொடுக்கிறோம் என்று சொல்லியது.

ADVERTISEMENT

இதற்கு உடன்படாத வேல்முருகன், இல்லையென்றால் ஒரு எம்.எல்.ஏ சீட், ஒரு ராஜ்யசபா சீட் வேண்டும். நான் டெல்லி சென்று மோடியை எப்படி கேள்வி கேட்கிறேன் பாருங்கள் என கேட்டியிருக்கிறார்.

ஆனால் உறுதியாக மறுத்த திமுக, ஒரு சீட் தான் ஒதுக்கப்படும் என்று கூறியது.

ADVERTISEMENT

இதனால் அதிருப்தியான வேல்முருகன் திமுக கூட்டணியில் நீடிக்கலாமா அல்லது வெளியேறலாமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாக தவாக தரப்பில் கூறுகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share