வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் கவலைக்கிடம்!

Published On:

| By Selvam

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவராக இருப்பவர், வெள்ளையன். இவர் நுரையீரல் தொற்று நோய் காரணமாக, சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் இன்று (செப்டம்பர் 9) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக எம்.ஜி.எம். மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நுரையீரல் தொற்று நோய் காரணமாக, வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன்  சென்னை அமைந்தகரை எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அவருக்கு ஆண்டிபயோடிக் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிண்டி ரேஸ் கோர்ஸ்.. “காலி செய்ய அவகாசம் கொடுக்காதது ஏன்?” – உயர்நீதிமன்றம் கேள்வி!

பொன்முடி மீதான சூமோட்டோ வழக்கு: 8 வாரங்களுக்கு ஒத்திவைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share