இன்னைக்கு மதியம் ஆபிஸுக்கு பைக்ல வந்துக்கிட்டு இருந்தேன்.
ஃப்ரெண்டு ஒருத்தன் கால் பண்ணி, வரும்போது பிரியாணி வாங்கிட்டு வர சொன்னான்.
மறுபடி கொஞ்ச நேரத்துலேயே கால் பண்ணி, பேக்ரியில க்ரீம் பன் வாங்கிட்டு வர சொன்னான்.
“பிரியாணி வாங்கிட்டு வர சொன்ன ஓகே… இந்த நேரத்துல க்ரீம் பன் எதுக்குடான்னு” கேட்டேன்.
“இல்லைடா… இப்போம் க்ரீம் பன் தான் டிரெண்டிங்ல இருக்கு. எல்லாரும் க்ரீம் பன் தான் ஸ்டேட்டஸ் வைக்குறாங்கன்னு” சொல்றான்.
இவனையெல்லாம் வச்சி என்ன பண்றது…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
கடைநிலை ஊழியன்
ஸ்கூல், காலேஜ், government office ‘க்கு எல்லாம், நாலு நாள் லீவ்.. ஆனா நம்ம வழக்கம் போல நாளைக்கு ஆபீஸ் போகணும்.. நம்ம வாழ்க்கை இப்படியே போயிருமா சரவணன்..

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
“ஒரு தோளில் கட்சியையும், மறு தோளில் கேப்டனையும், எங்களையும் சுமந்துட்டு தொண்டர்களுக்காக கட்சியை நடத்திட்டு இருக்காங்க…” தாய் பிரேமலதா குறித்து கண்கலங்கிய விஜயபிரபாகரன் # சரி, கட்சியையும் கேப்டனையைம் சொந்த கால்ல நிக்க விடாம பண்ணது யாரு..? அதுவும் என் தாய் மீனாட்சி பிரேமலதா தான்

தர்மஅடி தர்மலிங்கம்
நாம் வீழவும் இல்லை வாழவும் இல்லை பிறகு என்ன தான் செய்து கொண்டிருக்கிறோம் என்று இப்போதுவரையில் தெரியவுமில்லை!

balebalu
பிரச்சனையை இத்துடன் முடிப்போம் – அன்னபூர்ணா ஓனர் அப்படி எல்லாம் லேசுல விட முடியாது வேற கண்டெண்ட் கிடைக்குற வரை இதை வெச்சுதான் ஓட்டுவோம்

Sasikumar J
மொட்டை தலையில சந்தனம் தடவுவது விழுந்த கீறல்களை மறைக்கவே…!

கடைநிலை ஊழியன்
அவன் அவன், அவனோட ஆள் கிட்ட ஓணம் சாரி போட்டோ கேட்டுட்டு இருக்கானுங்க.. நம்ம என்னடா னா, இன்னைக்கு கறி குழம்பா.. கோழி குழம்பா னு யோசிச்சுட்டு இருக்கோம்..

Sasikumar J
வேற என்ன எது படிச்சாலும் அதுவாக மட்டும் தான் ஆக முடியும்…! ஆனா இன்ஜினியரிங் படிச்சா எதுவாக வேண்டுமானாலும் ஆகலாம்…!! #HappyEngineersDay #EngineersDay

ச ப் பா ணி
Sunday நல்லபடியா முடிஞ்சுதா..
கீழ இறங்கி வா
இப்படிக்கு Monday

படிக்காதவன்™
ப்ரண்ட்ஸோட இருக்கும்போது எங்களையே மறந்துடுவோம்னு சொல்றது மகன்கள்
எங்களுக்குள்ள போச்சுன்னா எங்களையே மறந்துடுவோம்னு சொல்றது “குடி’மகன்கள்…

சரவணன். ????
தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை என்ற பெயரில் அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடுவதெல்லாம் ஏற்றுக் கொள்ள கூடியது தான்.. ஆனால் அவர்கள் தூய்மை பணியாளர்கள் என்பதை காட்ட அதே ஆடையுடன் தான் உணவு சாப்பிட வேண்டும் என்பதை எப்படி ஏற்றுக் கொள்வது..

லாக் ஆஃப்
Comments are closed.