இது புதுசா இருக்குண்ணே… அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

இன்னைக்கு மதியம் ஆபிஸ்க்கு போனேன்.

நம்ம எடப்பாடி பழனிசாமி ஆக்ரோஷமா பொதுக்குழு கூட்டத்துல பேசிக்கிட்டு இருந்த வீடியோ லைவ்ல ஓடிக்கிட்டு இருந்துச்சு.

நண்பர்கிட்ட, “என்னய்யா… அதிமுக கூட்டத்துல என்ன ஸ்பெஷல்னு” கேட்டேன்.

“எப்பவும் பொங்கலும் புளியோதரையும் போட்டு ஏமாத்திராங்கன்னு ரொம்பவே வருத்தப்பட்டுக்கிட்டு இருந்த நிர்வாகிகளுக்கு இந்த தடவை மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வஞ்சரம் மீன் ஃபிரைன்னு வெரைட்டி வெரைட்டியா சாப்பாடு போட்ருக்காங்க. அதுமட்டுமில்லை… அதிமுகவுல புதுசா விளையாட்டு பிரிவு ஆரம்பிக்க போறாங்களாம்னு” சொன்னாப்ல.

“யோவ்… அதிமுகவே விளையாட்டு கட்சி தான். இதுல விளையாட்டு பிரிவு வேறயான்னு” கமெண்ட் அடிச்சேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி

ஐந்நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போடுறவன் fuel மீட்டரை பார்ப்பான்

ஐம்பது ரூபாய்க்கு பெட்ரோல் போடறவன் amount மீட்டரைத் தான் பார்ப்பான்

Dr. M. A. N. Loganathan

செல்வராகவன் தன் அடுத்த படத்துக்கு ‘மென்டல் மனதில்’ என்று டைட்டில் வைத்திருக்கிறார். ப்யூட்டி என்னான்னா அவரோட எந்தப் படத்துக்கு வேணா இந்தப் பெயரை வைக்கலாம்ங்கிறதுதான்.

Mannar & company™

புழல் மத்திய சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது. –செய்தி! புடிச்சி புழல் ஜெயில்லயே போடுங்க சார் அவனை!

ச ப் பா ணி

இயர்லி காலண்டராய் உன்னை இதயத்தில் வைத்துள்ளேன்; Monthly காலண்டராய் என்னை மாற்றிவிடாதே

▶படிக்காதவன்™✍

CM’யே மாத்துற அளவுக்கு பணமிருந்து என்ன சார் ப்ரயோஜனம்
ஸ்டைலுங்கிற பேர்ல ஒருகை இழுத்தாப்ள நடக்குறதை மாத்திக்க முடியலையே சார்
புஷ்பாவால…

Mannar & company™????


சிக்கனமாக இருந்தாலும் சேமிக்கலாம்,
மட்டன் வாங்காமல் சிக்கன் வாங்கியும் சேமிக்கலாம்!!

Sasikumar J

கேட்குறதை வாங்கி குடுத்துட்டு வாங்கி கட்டிக்கிறவன் அவன் தான் கணவன்…!

ச ப் பா ணி

எவ்வளவு அழகான பேராக இருந்தாலும்…கோபத்தில எருமைனு தான் கூப்பிடுவாங்க

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அரசு ஊழியர்கள் இலங்கைக்கு நிவாரணம்!

அஜித் கேட்ட 100 கோடி: ஒப்புக்கொண்ட நிறுவனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share