இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க என்ன பாத்து நேரா வந்த நண்பன் “மச்சான், தெரு நாய்களுக்கு பொது வெளியில உணவு அளிக்க கூடாதுனு சட்டம் போட்டுட்டாங்க தெரியுமா?”னு கேட்டான்…
ஆமா அதுக்கென்ன இப்போ?னு கேட்டேன். “ஆ… நீ ஏன் பேசமாட்ட… உங்க வீட்டுல உனக்கு மூனு வேளையும் மூக்கு முட்ட சோறு போடுறாங்க… ஆனா எங்க வீட்டுல எனக்கு ஒரு நேரம் கூட சோறு போடு மாட்டேங்குறாங்க… கேட்டா தெருநாய்க்கெல்லாம் சோறு போடக்கூடாதுனு கவர்மெண்ட் சொல்லிடுச்சினு எங்கப்பா நக்கலா சொல்றாரு”னு வருத்தப்பட்டான்.
”பிறகு வேற என்ன சொல்லுவாரு… நீ எப்பவும் தெருலதான் கெடக்குற… வேலைக்கு போகமாட்டாங்க… அப்போ அப்படி தானே சொல்லுவாங்க… இப்பவும் ஒன்னும் ஆயிடல.. நாளைக்கு என் கூட வா… என் கம்பெனில வந்து ஜாயின் பண்ணு”னு சொன்னேன்.
அதுக்கு அவன், “இல்ல மச்சான் நாளைக்கு 5ஆம் தெரு பசங்களோட கிரிக்கெட் மேட்ச் இருக்கு”னு சொல்லிட்டு கிளம்பிட்டான். அப்ப தான் தோனுச்சி.. அவங்க அப்பா சோறு போடாம இருக்குறது எவ்ளோ கரெக்ட்டுனு…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
அரசு உத்தரவுகளுக்கு எதிராக பேசிவிடக்கூடாது என்பதால் தான்
‘நீயா நானா’ ஷோவில் பேசாமல் இருந்ததாக யூட்யூபர் ஜனனி விளக்கம்.
ஏன் திமிங்கலம், அப்போ ஷோவுக்கு போகாம விட்டுருந்தா சேனல்காரனுக்கு சேரை துடைச்சு வைக்கிற வேலையாவது மிச்சம் ஆயிருக்கும்ல..?

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
10 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தி போலி வழக்கில் வென்ற கல்லூரிப் பேராசிரியர்… பொய் பாலியல் புகார் அளித்த மாணவிகள் மற்றும் சரியாக விசாரிக்காத போலீசாருக்கு நீதிமன்றம் கண்டனம் – செய்தி
வெறுமனே கண்டனத்தோட நிறுத்தாம, அந்த மாணவிகளை கைது பண்ணி இவர் அனுபவிச்ச அதே 10 வருசம் உள்ள தள்ளி கம்பி எண்ண வைப்பீங்களா யுவர் ஆனர்?

Mannar & company™🕗
நாய் வளர்க்கிறவங்களுக்கு அது ஒரு ‘story’,
நாய் கடி வாங்குபவர்களுக்கு அது ஒரு “history”!

Mannar & company™🕗
காதலிக்கிறப்ப பேசிகிட்டே இருக்கணும்னு நினைக்கிறதும்,
கல்யாணத்துக்கு அப்புறம் பேசாம இருக்கணும்னு நினைக்கிறதும் ஒரே ஆளா..?!

✒️Writer SJB✒️
நாய் கடித்த உடன் ரேபிஸ் தடுப்பூசி அவசியம்
தடுப்பூசி விற்று கார்ப்பரேட் கம்பெனிகள் கொள்ள லாபம் சம்பாதிக்க தெரு நாய் அவசியம்
கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும்!

காக்கா
மனுசன் 10000 ரூபாய் செலவு பண்ணாலும் மேல ரெண்டாயிரத்துக்கு செலவு வைக்கிற பெண்கள் தான், காசு பத்தல உங்க அப்பா கிட்ட 100 ரூபாய் வாங்கி கொடுனு சொன்னா அய்யோ எங்க அப்பா பாவம் அவருகிட்ட ஏது காசுனு 1008 காரணம் சொல்லுறாளுங்க. யார்ரி நீங்களாம்🤧🤧🤧

காவ்யா
பணக்காரங்க இருக்க தெருக்கல்ல நான் தெரு நாயே பத்தது இல்ல –
ஏனென்றால் அந்த பணக்கார நாய்கள் தனக்கு சோறு போட மாட்டாங்கன்னு அந்த தெரு நாய்களுக்கு மிக நன்றாக தெரியும்!

𝕲𝖚𝖗𝖚 𝕭𝖗𝖚𝖓𝖔 🇮🇳
எனக்கு தென்னை மரம் பிடிக்கும் என்றால் அதை என் காம்பவுண்டிற்குள் தான் வளர்க்க வேண்டும்
சாலைக்கு நடுவில் தென்னை மரம் வளர்த்து அதற்கு நீர் ஊற்றுவேன் என்பது மூடத்தனம்
லாக் ஆஃப்

