கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
வரும் 5ம் தேதி காலை 9 மணிக்கு மனம் திறந்து பேச உள்ளேன் – அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன்.
வரும் பிப்ரவரி 30ம் தேதி மாலை 5 மணிக்கு, எங்கள் மனைவிகளிடம் மனம் திறந்து பேச உள்ளோம் – அனைத்து இந்திய குடும்ப தலைவர்கள்.
என்னக்கென்னவோ இது அதுமாதிரியே இருக்கு..

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
இவ்வளவு செலிபரிட்டீஸ் தெருநாய்களுக்கு ஆதரவா பேசறதுல இருந்தே தெளிவா தெரியுது, எவனோ ஒருத்தன் எங்கிருந்தோ சாவி குடுக்கறான். நீயா நானால சொன்ன மாதிரி தடுப்பூசி பராமரிப்பு செலவுன்னு காசு அடிக்க போடற பிளான் தான் காரணமா இல்ல அத விட பெருசா வேறெதுவுமான்னு தான் தெரியலை

✒️Writer SJB✒️
மாட்டுக்கு ஒரு ஆபத்து என்றால் மறு வினாடி அங்கு நிற்பான்… நாய்க்கு ஒரு ஆபத்து என்றால் நாலு கால் பாய்ச்சலில் ஓடி வருவான்… சக மனுஷனுக்கு ஒரு ஆபத்து என்றால் அந்த பக்கம் திரும்பி கூட பார்க்க மாட்டான்… அவன் யார்???

Mannar & company™🕗
இந்த வாழ்க்கை சிலருக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது,
சிலருக்கு தடுமாற்றத்தை அளிக்கிறது,
சிலருக்கு மட்டுமே மாற்றத்தை அளிக்கிறது!

வசந்த்
தமிழ் மொழி தான் எனக்கு உயிர்
சரி.. உன் பையன் பெயர் என்ன?
சாய் அபயங்கர்

பனை – எதிரொலி
மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் மகன் மகாநாரியமன் போட்டியின்றி தேர்வு..
இதென்ன என்ன பெரிய விஷயம் நம்ம அமித் ஷா பையன் ஜெய் ஷா உலக கிரிக்கெட் கவுன்சில் தலைவர் தெரியுமா?

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
“ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்காக என்னால் கதை எழுத முடியாது..” – இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
அதுல ஒரு சின்ன திருத்தம், ‘எழுத தெரியாது..’ன்னு கழுதையை உண்மையை உடைச்சு சொல்லுங்க..

ச ப் பா ணி
‘ம்’ கொட்டுவதில் பெண்களும்,
‘உம்’ கொட்டுவதில் ஆண்களும்
பிரச்சனையை எளிதில் கையாள்கின்றனர்.

✒️Writer SJB✒️
வீட்டம்மா ~ ஆமா ரிசப்ஷன்ல என் தோழியை எதுக்கு அப்படி உத்து பார்த்தீங்க?
மீ~ இல்ல, உங்க ரெண்டு பேர்ல யார் அழகுன்னு கம்பேர் பண்ணி பார்த்தேன்
அவளை விட நீ தான் ரொம்ப அழகு..!
வீட்டம்மா ~ சரி.. சரி.. போ…
லாக் ஆஃப்