இருண்ட காலத்துக்கு அனுப்பாம விடமாட்டாங்க போல… அப்டேட் குமாரு

Published On:

| By christopher

update kumaru memes and trolls sep 17

இன்னைக்கு சாய்ந்தரம் லைட்டா மழை வர்ற மாதிரி இதமா காத்தடிச்சது. அதனால் ஒரு டீய போட்டு வரலாம்னு டீக்கடைக்கு போயிருந்தேன்.

அங்க போனா, “தவளையின் சப்தம், எறும்புகளின் நகர்வு ஆகியவற்றைக் கொண்டு வேத காலத்தில் எப்படி மழையைக் கணித்தார்கள்? என தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொள்கிறது” என டிவியில் செய்தியாளர் செய்தி வாசிச்சிட்டு இருந்தாரு.

ADVERTISEMENT

அத கேட்டுட்டு ”உலக நாடுகள் எல்லாம் மழை இல்லாத காலத்துலயும் மழை பெய்ய என்ன செய்யலாம்னு அறிவியல் பூர்வமாக ஆய்வு பண்ணிட்டு இருக்குற இந்த நேரத்துல இதெல்லாம் தேவைதானா?”னு நண்பர் கேட்டாரு.

இதுக்கே கடுப்பான எப்படி, “இந்த ஆராய்ச்சி ஆறு மாசம் நடக்குதாம்… இதுல பங்கேற்கிற 36 இண்டர்ன்ஷிப் மாணவர்களுக்கு 10 ஆயிரம் உதவித் தொகை வழங்க போறாங்களாம்”னு சொன்னேன்.

ADVERTISEMENT

இதெல்லாம் யார் அப்பன் வீட்டு பணம்னு இப்படி பண்றானுங்கனு தெரியலேயே… நம்மள இருண்ட காலத்துக்கு அனுப்பாம போக மாட்டானுங்க போலயே”னு தலைல அடிச்சி நொந்துக்கிட்டாரு.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

யாரோ

ADVERTISEMENT

அலமாரியில் ஒரு இறந்த உடல் ஒன்று கிடைத்தது அதன் பெயர் “புத்தகம் “..
விசாரணையில் கொலையாளி “மொபைல்” என்று கண்டறியப்பட்டது.. 😂 

Mannar & company™🕗

அலாரம் எழுப்பி எழுந்து வேலைக்குப் போறவன் தொழிலாளி,
பிரச்சினை வந்து எழுப்பி எழுந்து கம்பெனிக்குப் போறவன் முதலாளி!

Sasikumar J

~ டேய் முட்டை போண்டா சாப்பிடுறியா…

~ இல்ல வேண்டாம் புரட்டாசி மாசம்….

~ எனக்கு வடை போதும்…

~ அடேய் வடையும் அதே எண்ணெயில சுட்டது தாண்டா…!

Mannar & company™🕗

“புரட்டாசி வந்தா சோறு சாம்பார் சும்மா சைவம்…
ஆனா மனசுக்குள்ள ஆசை மட்டும் full non-veg craving!”

#புரட்டாசி

வசந்த்

துபாய் எதுக்கு போன?

~ கடனை அடைக்க

கடன் ஏன் வாங்குன?

~ துபாய் போக

🇸‌ᵖ🇸‌ᵃ🇱‌ˢ🇨‌ˢ👍

மூனு பேர் சேர்ந்து பைக்கில் அதிவேகமா போனாலும் சரி…
மூனு பேர் பொறுமையா இருந்து பொறணி பேச கூடினாலும் சரி..
ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப்போகுதுனு அர்த்தம் !

✒️Writer SJB✒️

மார்கழி மாசம் கம்பளி போர்த்திய பின்பும் பயங்கரமா குளிரும் போது நாம ஏன் கல்யாணம் பண்ணிக்க கூடாதுனு தோணும்…

அதுவே மனைவி நம்மிடம் எடக்கு மடக்கா கேள்வி கேட்கும் போது ஏசி ரூமிலும் வியர்க்கும்போது ஏன்டா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு தோணும்!

𝓖𝓸𝓴𝓾𝓵𝓗𝓪𝓪𝓼𝓪𝓷

எப்போ Salary increment பண்ணுவீங்க

Increment பண்ணுவோம்… நீ resign பண்ணதுக்கு அப்புறம் புதுசா வர்ற Person க்கு 🤗

balebalu

இருமுறை கடித்தால் நாய்க்கு ஆயுள் சிறை – உத்தர பிரதேச அரசு

நான் இங்க நாய் கடிச்சு வலியால துடிச்சு கிட்டு இருக்கேன்
அங்க என்னடா பண்ணிகிட்டு இருக்கீங்க

இருங்க அண்ணே

நாய் எத்தனை தடவை உங்களை கடிச்சது ன்னு

எண்ணி கிட்டு இருக்கோம்

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share