🌴PANDA 🌴
நாம் தமிழர்ஸ் டூ சீமான் ~
அடுத்த சனிக்கிழமை விஜய் தெருவுக்கு வந்து பேசும்போது …. நாம ஏன் நீங்க சொன்ன அஜித், நயன்தாராவ கூட்டிட்டு வந்து பாராட்டு விழா நடத்தக் கூடாது?

Mannar & company™🕗
“AI படம் clarity-யை தேடும்,
மனிதன் மனம் sincerity-யை தேடும்!”

வசந்த்
சின்ன வயசுல இட்லி சாப்பிட காசு இல்ல
ஆனா இன்னைக்கு பாருங்க என்கிட்ட ஒரு இட்லி கடையே இருக்கு

லாவண்யா
கோவில் தெப்பக்குளம் சீரமைக்கறோம், எதாவது நன்கொடை குடுங்கன்னு சங்கிஸ் சிலபேர் வந்தாங்க
ஒரு டம்ளர் தண்ணி தந்து அனுப்பிவிட்டுட்டேன்.

Mannar & company™🕗
‘கடவுளிடமே சென்று பிரார்த்தனை செய்து சரி செய்யச் சொல்லுங்கள்..!’ ~ தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் என்பதை “கலாய்”னு படிச்சுட்டேன்.

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியது பாஜகதான் ~ எடப்பாடி பழனிசாமி
யார் கிட்ட இருந்து காப்பாத்தினாங்க..?
என் கிட்ட இருந்து தான்..

✒️Writer SJB✒️
பைக்ல போகும்போது ஒரு பெரியவர் கைகாட்டி நிறுத்தி வண்டியில ஏறி
வயசானங்கள கூட்டிட்டு போய் விடுங்கப்பா புண்ணியம் கிடைக்கும் என்றார்,
மறுநாள் ஒரு பெரியவரை பார்த்ததும் நிறுத்தி வண்டியில் ஏறுங்க என்றேன்
நானே பிபி சுகர் குறைய வாக்கிங் போறேன் பேசாம போப்பா என்கிறார்.

காயிடு
ஸ்பீடு பிரேக்கர் மேல ஏறாம சைடுல ஒதுங்கி போறியே அவ்ளோ நல்லவனா டா நீ ?
ஸ்பீடு பிரேக்கர் மேல விட்டா என் வண்டி ஹெட்லைட் டூம் கழண்டு விழுந்துடும்..!

iQKUBAL
இன்டெர்வியூல HR கிட்ட உண்மையை சொன்னா வேலை குடுப்பாங்கன்னு நீ நெனைப்ப..
ஆனா, அந்த HR-ரே அங்க பொய் சொல்லி தான் வேலைக்கு சேர்ந்திருப்பான்..

லாக் ஆஃப்