mohanram.ko
நண்பர் 1 ~ ஒரு பவுன் தங்கத்தின் விலையை விட 9 ஆயிரம் மடங்கு ஒரு டீயோட விலை குறைவு…. டீயோட விலை குறைவா இருக்கேன்னு பாசிட்டிவா பாரு.
நண்பர் 2 ~ உனக்கெனப்பா பேச்சுலரு… கல்யாணம் பண்ணி பாரு அப்புறம் தெரியும்.


mohanram.ko
Zoho Mail யூஸ் பண்றீங்களா
நான் கடைசியா போனது ‘ஹவுரா மெயில்’ங்க

Sasikumar J
ஸ்கூல் படிக்கும் போது விளையாட வாடான்னு கூப்பிட்டா வர மாட்டான்…!
படிக்கணும் அப்படி சொல்லுவான்…!
இப்ப எந்த கம்பெனில எவ்வளவு போனஸ் வாங்குறான்னு தான் தெரியல…!!

✒️Writer SJB✒️
ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு தீபாவளி ரொக்கப் பரிசு வழங்கப் போவதாய் ஒரு தகவல் கசிந்து இருக்கிறது😍

சோ தர்மன்
ஒன்னரை கிராம் போதைப் பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட மலேசியத் தமிழர் ஒருவருக்கு சிங்கப்பூரில் நேற்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஊடகங்களில் செய்தி பார்த்தேன். என்னால் இந்நிகழ்வை இன்னும் கிரகிக்க முடியவில்லை.அதே சமயம் சட்டத்தை மிகவும் கறாராக அமல்படுத்தும் நாடுகளை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும். கடந்த வாரம் மூன்று நாட்கள் கேரளத்தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்தேன்.என்னை புகைவண்டி நிலையத்திலிருந்து அழைத்துப் போக வந்திருந்த நண்பர் டூ வீலர் வைத்திருந்தார்.ஆனால் என்னை ஒரு ஆட்டோவில் ஏறச் சொன்னார்.எதற்கு ஆட்டோ அதுதான் டூ வீலர் இருக்கிறதே என்றேன்.
தமிழ்நாடு மாதிரி இல்லை சார்.இங்கே டூ வீலர் பின்னால் உட்கார்ந்து பயணம் செய்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.இல்லையென்றால் காமிராவின் கண்களிலிருந்து தப்ப முடியாது என்றார்.அப்படியா என்றேன்.மிகவும் கறாராக இருப்பார்கள் காவலர்கள் என்றார்.எங்க அண்ணன் வார்டு செயலாளர் என்றோ வட்டச் செயலாளர் என்றோ கேமிராவிடம் சொல்ல முடியாது என்று ஜோக் அடித்தார்.அதே போல் கார்களில் சீட் பெல்ட் அணியாமல் யாருமே வண்டி ஓட்ட முடியாது என்பதை மூன்று நாட்களிலும் கண்டு கொண்டேன்.ஆண்களோ பெண்களோ யாராக இருந்தாலும் டூ வீலரில் செல்லும் இரண்டு பேரும் அவசியம் ஹெல்மெட் அணிந்தே ஆக வேண்டும்.இதையெல்லாம் பார்த்த போது எனக்கு அதிசயமாக இருந்தது .பழைய சம்பவம் ஒன்று மனசில் நிழலாடியது.
ஏ.ஐ.டி.யு.சி.இடதுசாரி தொழிற்சங்கத்தில் நான் துணைத் தலைவராக பணியாற்றிய காலம்.எங்கள் சங்க உறுப்பினர் தோழர் ஒருவர் மில்லுக்குள் பீடி குடித்ததாக வாட்ச் மேனால் கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு நிர்வாகம் ஜோகாஸ் நோட்டீஸ் கொடுத்து விளக்கம் கேட்டிருந்தது.பதில் எழுதி வாங்க கட்சி அலுவலகம் வந்திருந்தார்.அப்போது செயலாளராக இருந்தவர் வி.கணபதி என்கிற தோழர்.அவர் விசாரிக்கிறார்.
“மில்லுக்குள் பீடி சிகரெட் கொண்டு போகக் கூடாது என்று உங்களுக்கு தெரியுமா?
“தெரியும்”
“அப்புறம் ஏன் உள்ளே கொண்டு போனீர்கள்”
“எல்லாரும் கொண்டு போறாங்க அதுதான் நானும் கொண்டு போனேன்”
“அவங்க யாரையும் வாட்ச்மேன் பிடிக்கலையே உங்களை மட்டும்தானே பிடிச்சிருக்கிறார்”
“அவங்க எல்லாரும் மத்த யூனியன் காரங்க தோழர்”
“அது பற்றி நமக்கு கவலை இல்லை.பீடி குடித்தது உண்மையா இல்லையா”
“உண்மை”
“அப்படின்னா இனிமேல் உள்ளே வைத்து பீடி குடிக்க மாட்டேன்.இந்த ஒரு தடவை என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று பதில் எழுதிக் கொடுத்து விட்டு வேலைக்கு போங்கள்”
“இதுக்கு எதுக்கு நான் உங்கிட்ட வரணும் இப்பிடி யூனியன் எனக்கு தேவையில்லை”
“தாராளமாக வெளியே போகலாம்.யூனியன் என்பது குற்றங்களையும் பொய்களையும் மறைப்பதற்காக அல்ல. பழி வாங்கல்களையும் நிர்வாகத்தின் சட்ட மீறல்களையும் தடுப்பதற்காகத் தானே ஒழிய குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக அல்ல”
அப்புறம் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து விட்டுத்தான் அந்த தோழர் வேலை செய்தார்.இதில் நான் குறிப்பிடுகிற இந்த வி.கணபதி தோழர் காலத்தில் தான் கோவில்பட்டி பஸ் நிலையத்தை ஒட்டி ஜீவா இல்லம் என்கிற ஏ.ஐ.டி.யு.சி.சங்க அலுவலகம் கட்டி இரண்டு மாடி கட்டிடம்.பதினைந்து கடைகள் வாடகைக்கு விடப்பட்டு சங்கத்திற்கு நிரந்தர வருமானம்.இன்று இவைகளின் மதிப்பு பல கோடி ரூபாய்.
குறிப்பு:நான் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் பஞ்சாலைகள் பற்றிய நாவலில் முக்கிய கதாபாத்திரம் வி.கணபதி தோழர்.


✒️Writer SJB✒️
வட இந்தியாவில் நாங்க தப்பு செய்வோம் ஆனா கடவுள் தான் செய்ய சொன்னார்னு சொல்லி தண்டனையில் இருந்து தப்பி விடுவோம்,,
ஆனா தமிழ்நாட்டில் அது நடக்காது,
ஏன் ?
அந்த கடவுள்தான் உன்னை தண்டிக்க சொன்னார்னு புடிச்சி ஜெயில்ல போட்டுடுவோம்..!

லாக் ஆஃப்