இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க டீ குடிக்க வந்த நண்பர், டீ மாஸ்டர பாத்து திட்டிக்கிட்டே இருந்தாரு…
என்னானு கேட்டா, ”பத்து நாளா ஒரே வடைய திரும்ப திரும்ப போட்டு மாஸ்டர் கொடுக்குறார்”னு கொந்தளிச்சாரு..

அதுக்கு டீ மாஸ்டர், ’நாளைக்கு பாரு… வகைய வகையா வடைய சுட்டு உன் மூக்கு மேல விரல் வைக்க வைக்கிறேன்”னு குரல் உசத்தி சபதம் போட்டாரு.
அதுக்கு நண்பர் ”பத்து நாளா இந்த ஒரே வடைய தான் சுட்டுட்டு இருக்கீங்க… எப்ப தான் சொன்னத செய்வீங்க?” கேட்டாரு…
அவரு என்னவோ இந்த டீ மாஸ்டர பாத்து தான் சொன்னாரு… ஆனா எனக்கென்னவோ… ’குஜராத் டீக்கடக்காரர்’ ஞாபகம் வந்துடுச்சி. update kumaru memes and trolls may 5
நீங்க அப்டேட்ஸ் பாருங்க! update kumaru memes and trolls may 5

மனுஷ்ய புத்திரன்
இன்று காலை
ஒரு பறவை என் மேல்
எச்சமிட்டு விட்டது
அது என்மீதான தாக்குதல் என்பதில்
எந்த சந்தேகமும் இல்லை
“எச்சமிட்டது
தாடியும் குல்லாவும் வைத்த
பறவையா?” என்று கேட்டார்கள்
“இல்லை
அது சாவர்க்கர் ஏறிவந்த
புல் புல் பறவை” என்றேன்.

கடைநிலை ஊழியன்
மச்சான்.. நாளைக்கு நீ ஆபீஸ்க்கு போகாத டா..
ஏன் மச்சான்.. வெயில் ரொம்ப இருக்கு னு சொல்றியா.. ?
இல்ல மச்சான்.. என்னோட ஆள் கூட வெளிய போறேன்.. உன்னோட பைக் வேணும்..

SANKARRAMANI
மதுரை ஆதினம், நித்தியானந்தா என்ன வித்தியாசம்?
Sun TV Camera வில் மாட்டினா நித்தியானந்தா.
CCTV Camera வில் மாட்டினா மதுரை ஆதினம்.

balebalu
இலையுடன் தாமரை மலரும்
அப்பத்தான் இலை போட்டு சாப்பிட முடியும் – தமிழிசை
சரிதான்
ஆனா சாப்பிட்டவுடன் இலையை தூக்கி போட போறீங்கனு சொல்லுங்க 🤣

வடிவேல்
நீட் தேர்வில் பீர், ரம், விஸ்கி குறித்த கேள்வி – செய்தி
தகுதி வாய்ந்த மருத்துவர்களை தேர்ந்தெடுக்கும்போது
‘தகுதி வாய்ந்த கேள்விகளை’ கேட்பது
சகஜம் தானே 😜

செங்காந்தள்
விளை நிலைமாய் இருந்த போது அத்தனைக்கும் ஒரே கிணறு.
அது வீட்டுமனை ஆகிய பிறகு
ஒவ்வொரு வீட்டு மனைக்கும் ஒவ்வொரு ஆழ்துளைக் கிணறு…!!!

JANU
என்னை பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்ல முயற்சி ~ மதுரை ஆதினம்
எப்பா இந்தாளுக்கு யாராச்சும் படத்துல வாய்ப்பு குடுங்கப்பா என்னாமா நடிக்கிறாரு 😂😂😂😂
கதை எழுத கூட போகலாம் நல்ல எதிர்காலம் இருக்கு இவருக்கு 👏🏾👏🏾

✒️Writer SJB✒️
ஆதீனம் குசும்புக்காரர்… எப்படி Y பிளஸ் பாதுகாப்பு கேட்குறாரு பாத்தீங்களா?..!

லாக் ஆஃப்