இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க வந்த நண்பர்… ‘மாப்ள சாதனைக்கும், சோதனைக்கும் ஒரு வித்தியாசம் சொல்லுனு கேட்டாரு.
”உன் புள்ள ஒரு வருஷ ஸ்கூல் பீஸை ஒரே தவணையில் கட்டிட்டா, அது சாதனை…
ஜூன் மாசத்துல ஒரே முகூர்த்த நாளுல வர்ற ஒன்பது கல்யாணத்துக்கு மொய் கட்ட காசு இல்லனா அது சோதனை“னு சொன்னேன்.
இப்படி சொன்னதும், ‘மாப்ள… நான் கொஞ்சம் சோதனைல இருக்கேன். ஒரு 2 ஆயிரம் தருவியளா?’னு கேட்டாரு. ”மச்சான் என்கிட்ட போதனை வேணா கேளு… உன் சோதனைய சொல்லி பெரிய ரோதனை ஆக்கிறதனு சொன்னேன். கிளம்பிட்டாரு.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls june 8

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
“அனைவரும் எதிர்பார்க்கும் நல்ல செய்தி விரைவில் வரும்..” -ராமதாஸ், பாமக நிறுவனர்.
மக்கள் ~ எது, சூட்கேஸுக்கு புது கவர் வாங்கியாச்சுன்னா..?

தனபாலு
தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் – சரத்குமார்.
தமிழ்நாட்ல 234 தொகுதி இருக்குன்னு தெரிஞ்சு வைச்சுருக்காரு பாரேன்

சரவணன். 𝓜
நாட்டுல நாலு பேருக்கு ஏதாவது நல்ல கருத்து சொல்லலாம்னு பார்த்தா
அப்பத்தான் காய்கறியை கட் பண்ணுங்க, துவைச்ச துணியை காய போடுங்க, குப்பையை கொட்டிட்டு வாங்க, துணியை மடிச்சு வைங்க, குழந்தை கூட விளையாடுங்க ன்னு மனைவி தொடர்ந்து சொல்லிக்கிட்டே இருக்காங்க…

▶படிக்காதவன்™✍
படம் பேர் என்னவோ “Ten Hours”
படம் ஓடுறது என்னவோ
“Two hours”தான்…

Mannar & company™🕗
மதுரையில் நாங்கள் ஒன்று கூடுவதால் தி.மு.க.,வினருக்கு அச்சம் ஏற்படுகிறது: பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை
தி.மு.கவுக்கு மட்டும் இல்ல பொதுமக்களுக்கும்தான்!

கனகு
80 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ள நிலையில் ‘தி அமெரிக்கன் பார்ட்டி’ என்ற புதிய கட்சியை தொடங்கிய எலான் மஸ்க்!
ஜி மனசாட்சி ~ டிரம்ப் ரொம்ப வரி போடுறாரு… அதனால ’அடுத்த அமெரிக்க அதிபர் எலோன் மஸ்க் வாழ்க’னு இப்போவே ஒரு ட்விட் போட்ருவோமா?

ArulrajArun
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்கிற மாதிரி தான் பெரிய டைரக்டர் எடுக்குற படம் பெரிய கதை அம்சம் கொண்ட படமா இருக்கும்னு நம்புவதும்

உள்ளேன் ஐயா👋
நேத்து தான் பக்ரீத் முடிஞ்சிருக்கு அதனால கூட்டம் கொஞ்சம் குறைஞ்சிருக்கும்,
இன்னைக்கு முகூர்த்த நாள் வேற கல்யாணம், கிடா வெட்டுன்னு பாதிபேர் வரமாட்டாங்கன்னு நினைச்சு கறிக்கடைக்குப் போனால் எல்லா ஞாயிற்றுக்கிழமையும் நிக்கிற அதே கூட்டம்..
இந்த மக்கள புரிஞ்சிக்கவே முடியல…
லாக் ஆஃப்