தமிழ்நாட்டுல இப்படி ஒரு கட்சியா? – அப்டேட் குமாரு

Published On:

| By christopher

update kumaru memes and trolls june 27

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க நாடு முழுக்க அங்கீகரிக்கப்படாத 345 அரசியல் கட்சிகளை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துருக்காங்கனு செய்தி போட்டிருந்தாங்க..

அதுலயும், கடந்த 6 ஆண்டுகளாக எந்த தேர்தலையும் போட்டியிடாத ‘அப்பா அம்மா மக்கள் கழகம்’ கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் கொடுத்துருக்குறதா அதுல குறிப்பிட்டிருந்தாங்க…

அத படிச்சதும் ஷாக் ஆயிட்டேன்… இப்படி ஒரு கட்சிய என் வாழ்நாள்ல கேள்விபட்டதே கெடையாது. டீக்கடைல இருந்த யாருக்கும் அத பத்தி தெரியல… ஏன் இந்த பேர்ல கட்சிய தொடங்குனாங்க, அப்படி மக்கள் கிட்ட என்ன பேசிப்பாருங்க.. இவ்ளோ நாள் எங்க இருந்தாங்க… இப்படி யோசிச்சிக்கிட்டே அங்க இருந்து கிளம்பிட்டேன். update kumaru memes and trolls june 27

நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls june 27

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

வீட்டை சைவம் சாப்பிடறவங்களுக்கு வாடகைக்கு விட மாட்டேன்னு சொல்லலாம்னு பார்த்தா, சொந்தமா வீடு வேற இல்லை.. டெலிகேட் பொசிசன்..

Sasikumar J

மீ ~ நான் உனக்கு தூண் மாதிரி இருப்பேன் டா…!

ஷீ ~ அப்போ சும்மா கல்லு மாதிரி தான் நிப்பன்னு சொல்லுற…

ச ப் பா ணி

மனைவிமார்கள் ஒரு தடவ முடிவு பண்ணிட்டா,

கணவன்மார்கள் ஆயிரம் தடவ சொன்னாலும் கேக்கம் மாட்டாங்க..

#அனுபவம்

கோவிந்தராஜ்

நீங்க டாக்டர் ஆகாமலேயே..

ஒரு உயிரைக் காப்பாற்ற உதவுவது என்பது. ..

ஆம்புலன்ஸ்க்கு வழி விடுவது…!!😛

✒️Writer SJB✒️

ஜி ~ என்னமா இது… விமானத்துக்கு டோல் கேட் கட்டணம் போட்டிருக்கீங்க…

ஆமா ஜி, டோல் கேட் மேல பறக்குதுல்ல, அதுக்கு தான்… அடுத்து டோல்கேட் பாத்தாலே கட்டணம் வசூலிக்கலாம்னு ஐடியா போட்டுருக்கோம்.

கார்மேகம்

சின்ன சின்ன கஷ்டம் வரும்போது நமக்கு ஆறுதலாய் இருப்பது அம்மா

பெரிய துன்பங்கள் வராமல் நம்மை பாதுகாப்பது அப்பா

அம்மா இல்லாவிட்டால் வீடு இருட்டா இருக்கும்

அப்பா இல்லாவிட்டால் வாழ்க்கையே இருளாய் தெரியும்.

மேலே படத்தில் இருக்கும் அம்மா என் நண்பர்கள் தெருவில் கீரை விற்பவர்… வயது 80க்கு மேல் இருக்கும்… சுமார் ஒரு ஐந்து மாதங்களுக்கு முன்பு இந்த அம்மாவிடம் ஒரு கீரைக்கட்டு வாங்கினேன் கட்டு பதினைந்து ரூபாய் சொன்னார்கள்…. நான் இருபது ரூபாயாக கொடுத்தேன்…. ஐந்து ரூபாய் சில்லரை இல்லை என்றார்கள் பரவாயில்லையம்மா இருக்கட்டும் என கூறிவிட்டு வாங்கிச்சென்றேன்….

அந்த சம்பவத்தை நான் மறந்தேபோய்விட்டேன்…. எத்தனையோ முறை அந்த அம்மாவை கடந்துபோயிருக்கிறேன்… ஆனால் அவர்கள் என்னை கவனித்ததில்லை…. இன்று காலை வாக்கிங் போய்விட்டு வரும்போது எதிரில் வந்தார்கள் என்னை பார்த்தவுடனே “தம்பி…. உனக்குத்தானே அன்று நான் ஐந்து ரூபாய் பாக்கி தரவேண்டும்….? என்றார்கள்… அதுமட்டுமல்லாமல் நீ கீரை வாங்கி ஐந்துமாதம் இருக்குமே என்றதோடு, ஒரு டீகடையை சொல்லி அந்தப்பக்கம் போகும்போதுகூட அங்கு நீ நிற்கிறாயா என பார்த்தேன் என்றார்கள்….

நான் அப்படியே ஆச்சர்யத்தில் அசந்துபோய்விட்டேன்…. இந்த வயதில் இவ்வளவு ஞாபக சக்தியா…?வியாபாரத்தில் இவ்வளவு நேர்மையா….? நான் அந்த அம்மாவிடம் “பரவாயில்லம்மா இருக்கட்டும் என்றேன்…. “இல்லை தம்பி அது தப்பு… உழைத்த காசு கிடைச்சா போதும் என்றபடி ஐந்து ரூபாயை கொடுத்தார்கள்… அப்போதுதான் அவர்களைப்பற்றி கேட்டேன் “தனக்கு ஒரு மகன்தான் என்றும் கோயம்புத்தூரில் ஏதோ வேலை பார்பதாகவும், இரண்டு நாட்களுக்கு முன்பு வந்திருந்தபோது முன்னூறு ரூபாய் பணம் கொடுத்துவிட்டு போனதாகவும், தனக்கு முதியோர் பென்ஷன் வருவதையும் இந்த வியாபாரத்தையும் வைத்துதான் சாப்பிடுவதாக சொன்னார்கள்….

எனக்கு மனதிற்கு மிக வருத்தமாகிவிட்டது…. இப்போது கீரை எதுவும் வேண்டுமா என அந்த அம்மா என்னிடம் கேட்டார்கள்… நான் பணம் எடுத்துவரவில்லையம்மா என்றேன்… பரவாயில்லையப்பா அடுத்தமுறை என்னை பார்க்கும்போது கொடு என சொல்லி என் கையில் ஒரு கீரை கட்டை கொடுத்துவிட்டார்கள்…. இப்போது நான் அந்த அம்மாவிற்கு கடன்காரன்…

உண்மைதானே இதுபோன்ற நல்ல அறிவுரைகளை நமக்கு உணர்த்தி வாழ்ந்துகொண்டிருக்கும் பெரியவர்களுக்கும், நமக்கு நல்ல நெறிமுறைகளை கற்றுக்கொடுத்துவிட்டு சென்ற பெரியவர்களுக்கும் நாம் என்றுமே கடன்காரர்கள்தானே…!!!

படித்ததில்_பிடித்தது

பாக்டீரியா

ரெண்டு மூனு நாள் டூர் போறதுக்கு வேணா கூமாபட்டி போகலாம்.
ஆனால் செட்டில் ஆகுறதுக்கு எங்க ஊர விட சிறந்த ஊர் உலகத்துலயே இல்ல.

சரிசரி… தம்பி இப்போ எங்க வீடு கட்டிருக்கிய…

~ சென்னைல அண்ணே…

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share