இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க இந்த இன்ஸ்டால பிரபலமான கூமாப்பட்டி பத்தி தான் எல்லோரும் பேசிட்டு இருந்தாங்க.
அதுல ஒருத்தரு… “நான் கூட வெனிஸுக்கு போகனும்னு இருந்தேன். இப்போ தான் கூமாப்பட்டிய பத்தி தெரிஞ்சது… இனி கூமாப்பட்டிக்கு கிளம்ப வேண்டியது தான்.. வர்றியா மாப்ள”னு சொன்னாரு.
பக்கத்துல இருந்தவரு அவர் நண்பரு போல… ”ஏண்டா அன்னைக்கு ’வாடா பக்கத்துல இருக்குற குளத்துல போய் குளிச்சிட்டு வருவோம்’னு சொன்னதுக்கு… ’வெயில் ரொம்ப அடிக்குது… நான் வீட்டுலயே குளிச்சிக்குறே’னு எஸ்கேப் ஆகிட்டு… இன்னைக்கு வந்து கூமாப்பட்டி போறேன்… குதிர ஓட்ட போறேன்”னு கதையா விடுறா?னு படார்னு திருப்பி கேட்டாரு…
அவ்ளோ தான் கூமாப்பட்டினு கூவிட்டு இருந்தவரு… சைலண்ட் ஆயிட்டாரு… update kumaru memes and trolls june 25
நீங்க அப்டேட்ஸ் பாருங்க.. update kumaru memes and trolls june 25

Mannar & company™🕗
மக்கள் அதிகமாக கூடும் இடங்களில், நெடுஞ்சாலை பகுதிகளிலும் பேனர் வைக்க கூடாது.
–த.வெ.க கட்சி அறிவிப்பு
இப்ப எதுக்கு பேனர் வச்சிகிட்டு இருக்கீங்க?
நம்ம தலைவர் பேனர் வைக்கக் கூடாதுன்னு சொன்னார்ல அதுக்காகதான்!!

மெக்கானிக் மாணிக்கம்
தர வேண்டிய பாக்கி 10 லட்சத்துக்கு பவுடர் தந்தான்
அப்புறம்
இப்போ பவுடர் வாங்கியே அவனுக்கு 30 லட்சம் கடன் பட்டுட்டேன்

திருப்பூர் சாரதி
அண்ணே முக்குல போலீஸ் புடிக்கிறாங்க!
நானே மப்டி போலீஸ்தாண்டா …
🏃🏃🏃🏃

ச ப் பா ணி
மாப்பிள்ளை பார்க்க வருவதை விட கூடுதல் எதிர்பார்ப்பை தர வல்லது..
லோன் வெரிவிகேஷனுக்கு வீடு பார்க்க வருவதுதான்

✒️Writer SJB✒️
பாஜக செய்யும் அக்கிரமங்களை பார்க்காதே
பாஜக செய்யும் தவறுகளை கேட்காதே
பாஜக செய்யும் அட்டூழியங்கள் பற்றி பேசாதே..!

vadivelan
அவங்க மேடையில அண்ணாவ விமர்சனம் பண்ணப்போ எதிர்ப்பு சொல்லாம இப்ப சொல்றீங்களே ஏன்?? – மக்கள்
எடப்பாடி ~ நேத்து டிவில பாத்து தான் தெரிஞ்சுகிட்டேன் !!
ஓஹோ… இன்னும் திருந்தல போல…

பாலு
முருகர் ~ அவ்வையே கொடியது எது?
அவ்வை ~ உன் பெயரில் மாநாடு நடத்தி கடைசியில் தங்கள் கட்சிக்கு ஓட்டு கேட்டு உன்னை கேவலப்படுத்தியதுதான் முருகா..!

கரிகாலன்
என்னங்க நீங்க பத்து நாளைக்கு அசைவம் சாப்பிடக்கூடாதாம் முட்டை மட்டும் சாப்பிடலாமாம் அதை மட்டும் வாங்கிட்டு வாங்க,,
ஓகே… தம்பி 30 முட்டை கொடு..!
லாக் ஆஃப்