அதே கோஷம்… ஆனா கடைசில ட்விஸ்ட் – அப்டேட் குமாரு

Published On:

| By christopher

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க டிவில என் புருஷன் குழந்தை மாதிரி பட காமெடி ஓடிட்டு இருந்துச்சி…

அதுல ஹீரோவ பாத்து ஒருத்தரு ’வருங்கால ஜனாதிபதி முருகேசன்’னு கோஷம் போடுவாரு… அத கேட்டு கண்கலங்குற ஹீரோ, ’என்னமா ஃபீல் பண்ணி கூவுறாண்டா அவன்’ பேசுவாரு..

என்ன டைமிங்னு தெரியல.. அந்த நேரம் பாத்து வாட்ஸ் அப்ல ஒரு வீடியோ வந்துச்சி. அதுல திருமாவ பாத்து ஒருத்தரு, ’நாளை பிரதமர் வாழ்க’, ’நாளைய பிரதமர் வாழ்க’னு சத்தமா கோஷம் போட்டாரு…

அதுக்கு என்ன ரியாக்சன் கொடுக்கப் போறோரோனு பாத்தேன். ஆனா லிவிங்ஸ்டன் மாறி பண்ணாம திரும்பி திருமா ஒரு முறை முறச்சி ட்விஸ்ட் கொடுத்துட்டாரு… update kumaru memes and trolls june 12

நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls june 12

✒️Writer SJB✒️

விமானம் பறக்கும் தத்துவத்தை கண்டுபிடித்தது ரைட் சகோதரர்கள் அல்ல, பரத்வாஜ முனிவர் – உபி ஆளுநர் ஆனந்திபென் படேல்

தமிழ் மக்கள் ~ இவங்க ஆதாரமே இல்லாம பொய் சொல்லுவாங்க… ஆனா நாம் கீழடியில் தமிழர் நாகரீகம் பற்றிய ஆதாரம் காட்டினால் ஒப்புக்க மாட்டாங்க..!

#என்னங்க சார் உங்க நியாயம்!

சௌந்தர்

என்னை வெளியேற்ற பார்க்கிறார்கள் -டாக்டர் ராமதாஸ் ஆதங்கம்

பழையன கழிதலும் புதியன புகுதலும் தானே இயற்கை? டாக்டருக்கு படித்த உங்களுக்கு இது தெரியாதா??

வாசு

நீ உன் பொண்டாட்டிய சுகர் பேபின்னு சொன்னதும் அவ சந்தோஷத்துல உள்ள ஆடிட்டு இருக்கா

ஆனா அவளுக்கு சுகர் வந்திருக்கிற விஷயம் தெரிஞ்சதும் என்ன பாடு பட போறான்னு தெரியல..!

Sasikumar J

ஒரு தப்பான முடிவை மாற்றிக் காட்ட முடியாது

ஆனா ஒரு துவங்க போகும் செயலை சிறப்பாக செய்து காட்ட முடியும்…!

Joe…😎😎

11 வருட பாஜக ஆட்சியின் சாதனைகள் ~

கொரோனா மரணங்களுக்கு RTI யில கூட பதில் கிடைக்காது,

மோர்பி பாலவிபத்துக்கு நிர்வாகிகள் மேல பழி விழும்,

ஒடிசா ட்ரெயின் விபத்துக்கு ஓட்டுனவன் மதத்தை பற்றி ஆராய்ச்சி நடக்கும்,

மணிப்பூர் கலவரத்தை பற்றி கேள்வி கேட்டாலும் பதில் கிடைக்காது,

கும்பமேளால செத்தவங்களுக்கு நிவாரணத்தொகை குடுக்க மாட்டாங்க,

தீவிரவாத தாக்குதலுக்கு தீவிரவாதியை கடைசிவரை பிடிக்கமாட்டாங்க,

ஆட்சி செய்ற அரசாங்கம் தான் இதுக்கு பொறுப்புன்னும், அதை கேள்வி கேட்க வேண்டியது மீடியாவோட கடமைன்னு மக்கள் உணராத அளவுக்கு மாத்திட்டாங்க..

✒️Writer SJB✒️

ஹலோ அறிவழகன் வீடா?

ஆமா

நீங்க யாரு பேசுறது?

நான் அவனோட அம்மா பேசுறேன்

அறிவு இருந்தா அவன் கிட்ட போன் குடுங்க..!!!

வடிவேல்

20 வயதில் காதலிக்கும் போது படிக்கிற வயசுல உனக்கு லவ் கேக்குதா என்ன விரட்டி விரட்டி அடிக்கும் பெற்றோர்

30 வயது ஆனதும் யாரையாவது லவ் பண்றியா சொல்லுடா அவளையே உனக்கு கல்யாணம் செஞ்சு வைக்கிறோம் என்று சொல்வார்கள்.

ஜமாலுதீன்

வரதட்சணை எல்லாம் வேண்டாம் கிளினிக் போய் வர ஒரு கார் வாங்கி கொடுங்க,

சரிங்க மாப்பிள்ளை வேற எதுனா வேணும்னாலும் தயங்காம கேளுங்க

அப்படியே ஒரு கிளினிக்கும் கட்டிக் கொடுத்துடுங்க..!

(டாக்டர் மாப்பிள்ளை அட்ரா சிட்டி)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share