வருஷத்துல 6 மாசம் போயிடுச்சி.. இருக்குற அடுத்த 6 மாசத்துலயாவது உடம்ப குறைச்சிருலாம்னு ஜிமுக்கு நண்பனை கூட்டிட்டு போனேன்.
ஜிம் வாசல்ல டீக்கடை. மச்சான் ஒரு டீயப் போட்டு போவோம்னு நண்பன் சொன்னான்.
”வேண்டாம் மாப்ள… போன ஜனவரிலயும் இப்படிதான் ஜிம்முக்கு போவோம்னு காசக் கட்டி, வாசல் வர வந்துட்டு… டீக்கடைல ஒரு ஹார்லிக்ஸ், 2 வட, 3 போண்டானு தின்னுட்டு கிளம்பிட்டோம். மறுபடியும் அப்படி நடந்துக்க வேணாம். வா ஜிம்முக்கு போவோம்”னு சொன்னேன்.
சவுண்டே இல்ல.. ஆள தேடுனா… டீக்கடைல போண்டாக்கு சட்னி ஊத்தச் சொல்லி சண்ட போட்டுட்டு இருக்கான். ’இவன்லாம் திருந்த வாய்ப்பே இல்ல’ திட்டிட்டு, நானும் டீக்கடைக்கு கிளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls july 1

✒️Writer SJB✒️
இப்பெல்லாம் மனைவி ’ஏங்க’ ன்னு கூப்பிட்டா கூட கூமாப்பட்டி தான் ஞாபகத்துக்கு வருது🤦😂

சரசு
நாளைக்கு வர வேண்டிய சம்பளம் இன்னைக்கே வந்துடுச்சு
அந்த கூமாபட்டி என்ன விலைன்னு கேளு?
இந்த மேட்டூர் டேம் என்ன விலைன்னு கேளு???

கலகக்காரன்
அதிமுகவை எதிரிகளால் அழிக்க முடியாது- எடப்பாடி
ஆமா அவங்களே அழிச்சிடுவாங்க😜

கார்த்திகா
அந்த பொண்ணு செத்ததுக்கு மாமனார் மாமியார் புருஷன் மட்டும் காரணம் கிடையாது. தைரியமா வளக்காம அதையும் மீறி பிரச்சனைனு வந்து சொன்னதுக்கு சகிச்சுக்கோ பொறுத்துக் கொண்டு போனு சொல்லி சொல்லி திருப்பி அனுப்புன பெத்தவங்களும் தான் காரணம்.
ஒரு சமூகமா நாம் வெட்கப்படனும்!

பர்வதம்மா
அம்மா சொன்னால் பாசமாகவும்
மனைவி சொன்னால் திகிலாகவும் இருக்கும் ஒரு வாக்கியம்,,,
’ஒடம்பு எப்படி இருக்கு?’

ராகவன்
இன்னைக்கு சம்பள நாள்
உனக்கு மாசம் எவ்வளவு நிக்குது?
இஎம்ஐ வீட்டு வாடகை வட்டி எல்லாம் கட்டின பின்னாடி மாசம் ஐயாயிரம் ரூபாய் கடன் நிக்குது..!

பழவேசம்
வாசலுக்கு தண்ணி தெளிச்சு ஏன் கோலம் போடுறோம் தெரியுமா?
தெரியாது நீங்களே சொல்லுங்க?
கோலம் போட்டு தண்ணி தெளிச்சா கோலம் கலைஞ்சிடும்,,
இன்னிக்கி உங்களுக்கு டிபன் உப்புமா தான்..!

லாவண்யா
பத்து லட்சம் விலையுள்ள புடவை கட்டி இருந்தாலும் தெருவில் போகும் பெண் கட்டியிருக்கும் புடவையை பார்ப்பது பெண்களின் குணம்,
உலக அழகி போல் மனைவி இருந்தாலும் தெருவில் போகும் பெண்ணை திரும்பி பார்ப்பது ஆண்களின் குணம்..!

சித்ரா தேவி
ஐந்து நிமிடத்தில் ஆறு தெருக்களைக் கடந்து சென்று விற்பனை செய்யப்படும்
இடியாப்பம்தான் ரியல் Fast Food!
லாக் ஆஃப்