இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க இருந்த நண்பர் கூலி படத்துக்கு டிக்கெட் கிடைக்கலேயேனு சொல்லி ரொம்ப வருத்தப்பட்டுட்டு இருந்தாரு.
அவருக்கிட்ட , “நேத்து நீ தான, ’போன வார கூலி இன்னும் கைக்கு வரல… நாளைக்கு கொடுக்கல அந்த மேஸ்திரி மொகரைய உடைச்சிருவேன்’னு சொல்லிட்டு இருந்த.. கூலி கொடுத்துட்டாரா?னு கேட்டேன்.
”அட நீ வேற… நேத்து பேச்சு… நேத்தோட போச்சு… கதம் கதம்… எனக்கு நாளைக்கு படம் பார்க்க கூலி டிக்கெட் கிடைக்குமா’னு என்கிட்டயே கேட்டாரு…
ஒன்னும் புரியல.. ‘டேய் அந்த கூலி கெடச்சிதா இல்லையா?”னு திருப்பி கேட்டதுக்கு, ‘நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாறி”னு ஏதோ வெறிப்புடிச்சா மாறி கத்தி டயலாக் பேசுனாரு..
இதுக்க மேல இருந்தா தாங்க முடியாதுனு அங்கிருந்து கிளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

🌻Mr.Easytalkoos🌻
புலிக்கு கூட பயம் இல்லை எப்படியாவது அதை அடக்கிடலாம் போல.
ஆனால் நமக்கு பயமே நாயை கண்டால் தான் வருது.

Mannar & company™🕗
வாரத்தின் நடுவில் வரும் புதன்கிழமை என்பது திரைப்படத்தில் வரும் Interval மாதிரி..
மீதிப் படம் நல்லா இருக்குமா என்பது சந்தேகம்!

Abhi&Abhi
வெஜிடேரியன்ஸ நாய் கடிக்காதா ??
ஒரு சீரியஸ் டவுட்!

கடைநிலை ஊழியன்
இந்த தெரு நாய் ஆதரவாளர்கள் எல்லாரையும், வீட்டுக்கு நாலு தெரு நாய் எடுத்து வளர்க்க ரெடியா னு உச்ச நீதிமன்றம் கேக்க போகுது.. அப்ப ஓடிருவானுங்க..

✒️Writer SJB✒️
நாளைக்கு கூலிக்கு போறேன் காசு கொடு,,
கூலிக்கு போனா அவங்கதான் காசு தருவாங்க என்கிட்ட எதுக்கு கேக்குறீங்க?
நாளைக்கு கூலி படத்துக்கு போறேன்னு சொன்னேன்,,,
என்னடா சொன்ன,,,😡😡😡

✒️Writer SJB✒️
கடன் அடைஞ்சதுக்கு அப்புறம் அப்புறம் கார் வாங்குனதுக்கு அப்புறம் செட்டில் ஆனதுக்கு அப்புறம் இப்படி அப்புறம் அப்புறம் என உங்கள் சந்தோஷங்களை தள்ளிக் கொண்டே போகாதீர்கள் அப்புறம் உங்களுக்கு எதுக்குமே நேரம் கிடைக்காது..!

✒️Writer SJB✒️
மம்மி வயித்த வலிக்குது,,
வயித்துல ஒன்னும் இல்லன்னா அப்படித்தான் வலிக்கும்,,
அப்ப நேத்து நீ தலை வலிக்குதுனு சொன்னியே..?
லாக் ஆஃப்