வீட்டுல பொண்ணு பாக்குறாங்க, அதனால காலைல எந்திச்சதும் அம்மா, ’டேய் கடைல போய் நாலஞ்சு போட்டோ எடுத்துட்டு வாடா’னு சொன்னுச்சி..
சரினு கடைக்கு போயி போட்டோ எடுத்துட்டு, கடைக்காரர்ட, “அண்ணே எல்லோரும் என்ன பாக்குறா மாறி நல்லா எடிட் பண்ணி தா’னு கேட்டேன்.
அதுக்கு, என்னய சன்னி லியோன் கூட நிக்குற மாறி பண்ணி வச்சிருக்கான். அத பாத்து ஷாக் ஆகி ’ஏண்ணே இப்படி பண்ணி வச்சிருக்க?’னு கேட்டேன்.
அதுக்கு அவன், ’இப்படி பன்னா தான் நீ சொன்னா மாறி எல்லோரும் உன்ன பாப்பாங்க… இந்த மாறி எடிட் பன்னி தான் இன்னைக்கு சிலர் தலைவரா இருக்காங்க… இப்ப இதான் டிரெண்ட்’னு சொன்னாரு பாருங்க…
வந்த கடுப்புல.. நாலு வார்த்த நறுக்குனு கேட்டுட்டு கெளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Sasikumar J
சென்னை டிராபிக் வாழ்க்கையில் மீண்டும் இயல்பு நிலைக்கு தி(ரும்பி)(ணறி)யது…!
மாஸ்டர் பீஸ்
முன்முடிவுகளோடு பேசத்துவங்கும் போதே அமைதியாகிவிடுங்கள் அதுதான் குறைந்தபட்ச ஆறுதல்!!!

mohanram.ko
யாருண்ணே நீ?
ஒரு வாரம் லீவு முடிந்து வந்தா, கூட ஆபிஸ்ல வேலை பார்ப்பவரை யே யாருன்னு கேட்கறயேப்பா…

amudu
பெரிய மருத்துவமனைகளை கண்டால் “உயிர் காக்கும் இடம்” என்று நினைப்பவர்களை விட, “பணம் பிடுங்கும் இடம்” என நினைப்பவர்களே இங்கு அதிகம்.
கோழியின் கிறுக்கல்!!
பல அம்மாக்களின் கலைத் திறன்,
பிள்ளைகளின் Project workல் தான் வெளி வருகின்றது!!

படிக்காதவன்™
வரப்போகும் பிப்ரவரி மாசத்த நினைச்சி சந்தோஷப்படுறவன் காதலனாகவும்
வருத்தப்படுறவன் சிங்கிலாகவும் இருப்பான்…
Sasikumar J
வீரம்னா என்ன தெரியுமா…
ஊருக்கு போன பொண்டாட்டி திரும்பி வரும்போது வீடு போனப்ப எப்படி இருந்துச்சு அப்படியே இருக்குன்னு சொல்ற மாதிரி மெயின்டன் பண்றது தான்…!

கோவிந்தராஜ்
கனவில் வந்த லாட்டரி நம்பரை நேரில் வாங்கி 43 கோடி பரிசு பெற்ற பெண் – செய்தி
~ நம்ம தூங்கினா மட்டும் லாரில அடிபடுற மாதிரியும் பிச்ச எடுக்குற மாதிரியும் கனவு வருது.!

லாக் ஆஃப்