ADVERTISEMENT

மாணவிக்கு பாலியல் தொல்லை… சென்னை ஐஐடி விளக்கம்!

Published On:

| By Selvam

சென்னை ஐஐடியில் படித்து வரும் ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவரை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள விளக்கத்தில், “நேற்று மாலை (ஜனவரி 14) 5.30 மணியளவில், வேளச்சேரி – தரமணி பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடையில், சென்னை ஐஐடியில் படித்து வரும் பெண் ஆராய்ச்சி மாணவி ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அந்த பெண் மாணவியுடன் வந்த ஆண் மாணவர்களும், சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களும், குற்றவாளியைப் பிடித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடித்து ஐஐடிக்கு தகவல் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் ஐஐடி வளாகத்திற்கு வெளியே ஒரு பேக்கரியில் பணிபுரிகிறார். அவருக்கும் சென்னை ஐஐடிக்கும் எந்த தொடர்பும் இல்லை.

ADVERTISEMENT

சென்னை ஐஐடி வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்களை நிறுவியுள்ளது. அதன் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மாணவர்கள் வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மாணவிக்கு தேவையான அனைத்து ஆதரவையும் சென்னை ஐஐடி வழங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

செல்வம்

தை மாத நட்சத்திர பலன்கள்: விசாகம்

12 விநாடிகளில் 6 ஆயிரம் லிட்டர் தண்ணீர்… லாஸ் ஏஞ்சல்சில் தீயை அணைக்கும் சூப்பர் ஸ்கூப்பர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share