பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு முழுவதும் இன்று ஜூலை 15-ந் தேதி முதல் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் தொடங்கப்படுகிறது. Ungaludan
Stalin
“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் தொடர்பான சில தகவல்கள்:
- இன்று ஜூலை 15-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் “உங்களுடன் ஸ்டாலின் திட்டம்” தொடங்கப்படும்.
- கடலூர் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின் திட்ட”த்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
- முகாம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அனைத்து ஆவணங்களோடு மக்கள் தயார் நிலையில் உள்ளனர்
- உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறக்கூடிய மனுக்களெல்லாம் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்
- 1 இலட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
- நவம்பர் மாதம் வரை 10,000 முகாம்கள் நடத்தப்படும்.நகர்ப்புறத்தில் 3,738; ஊரகப் பகுதிகளில், 6,232 முகாம்கள் நடத்தப்படும்.
- அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் முகாம் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது; மாவட்ட நிர்வாகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு துறையைச் சார்ந்த Nodal Officer (SDC (SSS)) அவர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டது
- அனைத்தும் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு கணிணி ஆய்வாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது
- தன்னார்வலர்களுக்கும் கையேடு அளிக்கப்பட்டு அவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, வீடு வீடாக அனுப்பி வைக்கப்பட்டனர்
- முதல் கட்டமாக 15.7.2025 முதல் 15.8.2025 வரை முகாம்கள் நடைபெறும்; முகாம்களின் எண்ணிக்கை 3,563 (ஒரு மாதத்தில்), நகர்ப்புற பகுதிகளில் 1428 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 2,135 முகாம்கள், தன்னார்வலர்கள் 28370 பேர் பயன்படுத்தி இந்த முகாம்களுக்கான மக்களுக்கு விழிப்புணர்வு அளித்து விண்ணப்பங்கள் அளித்திருக்கின்றனர்.
- ஒரு மாவட்டத்தில் சுமார் 6 முகாம்கள் நடைபெறும். வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய 4 நாட்கள் முகாம்கள் நடைபெறும்.
- “உங்களுடன் ஸ்டாலின்” என்ற Website தயார் செய்யப்பட்டுள்ளது.
