முனைவர். ச.குப்பன்
பரந்த அளவு பெரும் எண்ணிக்கைகளிலான இளைஞர்களை கொண்ட இந்தியா தற்போது, அதன் பொருளாதாரப் பயணத்தில் ஒரு முக்கிய கட்டத்தில் உள்ளது. வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இது இருந்தாலும், அதிக எண்ணிக்கையில் உயர்ந்து வரும் அதன் இளைஞர்களின் எண்ணிக்கைக்கு பொருத்தமான நிலையான வேலைவாய்ப்பை வழங்குவதில் உள்ள சவால் ஒரு வலிமையான தடையாகவே உள்ளது.
இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை எனும் சவால் hidden unemployment in India
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை எனும் சூழ்நிலை பல முக்கியமான சிக்கல்களால் வகைப்படுத்தப்படுகிறது.hidden unemployment in India
1. வேலைவாய்ப்பின்மையும் மறைக்கப்பட்ட வேலைவாய்ப்பின்மையும்

அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பின்மை விகிதங்கள் மிதமானதாகத் தோன்றலாம் (பொருளாதார ஆய்வு 2024-25 இன் படி 2017-18 இல் 6% இலிருந்து 2023-24 இல் 3.2% ஆகக் குறைந்துள்ளது), இந்த புள்ளிவிவரங்கள் பெரும்பாலும் வேலைவாய்ப்பின்மையின் ஆழ்ந்த பிரச்சனையை மறைக்கின்றன.
குறிப்பாக வேளாண்மையிலும் முறைசாரா துறைகளிலும், கணிசமான பணியாளர்கள் குறைந்த உற்பத்தித்திறன், குறைந்த ஊதியம் அல்லது தாம் விரும்பியதை விட குறைவான அளவிற்கே வேலை செய்கிறார்கள்.
இந்த “மறைமுக வேலைவாய்ப்பின்மை” என்பது தொழில்நுட்ப ரீதியாக வேலை செய்பவர்கள் கூட தங்கள் திறனை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்பதை குறிப்பிடுகின்றது, இதனால் தனிநபரின் வருமானமும் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனும் குறைகிறது. முறைசாரா துறையின் வேலைவாய்ப்பானது மிக அதிர்ச்சியூட்டும் வகையில் இந்தியாவின் பணியாளர்களில் 85-90% அளவிற்கு கொண்டுள்ளது. இவ்வாறான வேலைவாய்ப்பானது பெரும்பாலும் சமூகப் பாதுகாப்பு, நியாயமான ஊதியம் பணிப் பாதுகாப்பு போன்ற தொழிலாளர் நலன் எதுவும் இல்லாமல் உள்ளது. hidden unemployment in India
2. பொருத்தமில்லாத திறனும் கல்வியும் hidden unemployment in India

பட்டதாரிகளின் திறன்களுக்கும் நவீன வேலைச் சந்தையின் தேவைகளுக்கும் இடையிலான குறிப்பிடத்தக்க பொருத்தமின்மை ஒரு தொடர்ச்சியான சவாலாகும். கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் மாணவர்களை தொழில்துறை தொடர்பான திறன்களுடன் தயார்படுத்தத் தவறிவிடுகின்றன, இதனால் அதிக எண்ணிக்கையிலான பட்டதாரிகள் வேலையில்லாமல் போகிறார்கள். எடுத்துக்காட்டாக, பொறியியல் பட்டதாரிகளில் அதிக சதவீதத்தினர் தமக்கு தேவையான வேலைவாய்ப்பு திறன்களைக் கொண்டிருக்கவில்லை என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த கட்டமைப்பு வேலைவாய்ப்பு எனும் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு பெரிய தடையாகும்.
3. இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை:
இந்தியாவானது அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களை கொண்ட நாடாக இருந்தாலும், அவ்வாறான இளைஞர்கள் அதிகளவில் வேலைவாய்ப்பின்மை எனும் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். 2024 ஆம் ஆண்டில், இளைஞர் வேலைவாய்ப்பின்மை விகிதம் 16.03% ஆக இருந்தது. இது பணியிடத்தில் நுழையும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் போராட்டத்தை எடுத்துக்காட்டுகிறது. பொருத்தமான திறனும் போதுமான வேலைவாய்ப்புகளும் இல்லாததால் இந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் குறிப்பாக முறைசார்ந்த துறையில் அதிகரிக்கிறது.
4. தானியங்கி தொழில்நுட்பமும் தொழில்நுட்ப சீர்குலைவின் தாக்கமும்:

தானியங்கியான பணி, செய்யறிவு (AI) , உருவாக்க செய்யறிவு (GenAI) ஆகியவற்றின் விரைவான முன்னேற்றம் உலகளவிலும் இந்தியாவிலும் தொழிலாளரின் வேலைவாய்ப்பு சந்தையை மறுவடிவமைப்பு செய்து வருகிறது. தானியங்கியான பணியானது உற்பத்தித்திறனை அதிகரிக்க முடியும் என்றாலும், அது வேலைகளை இடமாற்றம் செய்ய அச்சுறுத்துகிறது, குறிப்பாக குறைந்த திறன், மீண்டும் மீண்டும் செய்யும் பணிகள் குறிமுறை வரிகளின் வழிமுறை , வாடிக்கையாளர் ஆதரவு போன்ற தொழில்நுட்பத்தில் தொடக்க நிலைப் பாத்திரங்களில் கூட. இந்த “பெரிய இடப்பெயர்ச்சி” என்பது பணியாளர்களிடமிருந்து தொடர்ச்சியான திறன் மேம்பாடு, தகவமைப்புத் திறன் ஆகியவற்றினை அவசியமாக்குகிறது. hidden unemployment in India
5. குறைந்து வரும் தொழிலாளர்களின் படையின் பங்கேற்பு விகிதம் (LFPR)
சில நேரங்களில் ஏற்ற இறக்கமான குறைந்து வரும் LFPR ஆனது ஒரு கவலைக்குரிய போக்கு ஆகும், இது வேலை செய்யும் வயதுடைய மக்கள்தொகையில் ஒரு சிறிய பகுதியினர் தீவிரமாக வேலை செய்கிறார்கள் அல்லது வேலை தேடுகிறார்கள் என்பதைக் குறிக்கிறது. இது குறிப்பாக பெண்கள் மத்தியில் கவனிக்கத்தக்கது, அங்கு சமூக விதிமுறைகளும் பொருத்தமான வாய்ப்புகளுக்கான வரையறுக்கப்பட்ட அணுகுதலிலும் பெரும்பாலும் பெண்கள் முறையான வேலைகளின் பணியாளர்களாக பங்கேற்பதைத் தடுக்கிறது. hidden unemployment in India
6. முறையான துறையின் வேலைவாய்ப்பில் மெதுவான வளர்ச்சி
சேவைத் துறை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பெரும்பகுதியை கொண்டிருந்தாலும், அதிக எண்ணிக்கையிலான முறையான, உயர்தர வேலைகளை உருவாக்கும் அதன் திறன் மிகவும் குறைவாகவே உள்ளது. வளரும் பொருளாதார சூழல்களில் வேலை உருவாக்கத்திற்கான ஒரு முக்கியமான துறையாக பெரும்பாலும் கருதப்படும் உற்பத்தித் துறை, பரந்த தொழிலாளர் தொகுப்பை உள்வாங்கும் அளவிற்கு வளர்ச்சியடையவில்லை. hidden unemployment in India
வலுவான வேலைவாய்ப்பின்மை எனும் சூழலுக்கான தீர்வுகள்

இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை எனும் பிரச்சினையைத் தீர்வுசெய்வதற்கு அரசு, தனியார் துறை, கல்வி நிறுவனங்கள், தனிநபர்களை உள்ளடக்கிய பன்முக, கூட்டு அணுகுமுறை தேவைப்படுகிறது. hidden unemployment in India
1. கல்வி திறன் மேம்பாட்டு சூழலை புத்துயிர் பெறுமாறுசெய்தல்
தொழில்-கல்வி ஒத்துழைப்பு: இளைஞர்கள் பெறுகின்ற கல்விக்கும், தொழில்துறை தேவைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பது மிக முக்கியமானதாகும். பட்டதாரிகள் தொழில்துறையின் தேவைக்கேற்ப திறன்களைக் கொண்டிருப்பதை உறுதிசெய்ய, கல்வி நிறுவனங்கள் தொழில்துறைகளுடன் கலந்தாலோசித்து தங்கள் பாடத்திட்டங்களைத் தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும்.
தொழிற்பயிற்சியும் வேலைவாய்ப்புபயிற்சிகளும்: தேசிய தொழிற் பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம் (NAPS) போன்ற முயற்சிகளின் மூலம் தொழிற்பயிற்சியின் செயல் திட்டங்களை வலுப்படுத்துதல் தொழிற் பயிற்சிகளை ஊக்குவித்தல், நடைமுறைப்பணியில், வேலையில் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை மேம்படுத்துதல்.
எதிர்காலத் திறன்களில் கவனம் செலுத்துதல்: செய்யறிவு (AI) , இயந்திர கற்றல், தரவு பகுப்பாய்வு, சைபர் பாதுகாப்பு , மேம்பட்ட உற்பத்தி போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான பயிற்சியில் அதிக முதலீடு செய்வது எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கேற்ப இளைஞர்களைத் தயார்படுத்துவது மிக முக்கியமாகும். அதற்கேற்ற புதிய நவீனப் படிப்புகளைச் சேர்ப்பதன் மூலம் இதை சரி செய்வதை பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா (PMKVY) நோக்கமாகக் கொண்டுள்ளது.
2. தொழில்முனைவோர் , தொடக்க நிறுவனங்களின் சூழல் அமைப்பை வளர்ப்பது:
அடைகாக்கும்( Incubation) மையங்கள், வழிகாட்டுதல்: அதிக அடைகாக்கும் மையங்களை நிறுவுகைசெய்தல் , வழிகாட்டுதல், ஊக்கத்தொகைகள், எளிமைப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை நடைமுறைகளை வழங்குதல் ஆகியவை புதுமையையும் சுய வேலைவாய்ப்பு கலாச்சாரத்தையும் ஊக்குவிக்கும். ஸ்டார்ட்அப் இந்தியா, ஸ்டாண்ட்-அப் இந்தியா போன்ற திட்டங்கள் இந்த திசையில் எடுக்கப்பட்ட படிமுறைகள் ஆகும். hidden unemployment in India
எளிதாக கடன் கிடைத்தல்: சிறு வணிகங்கள், ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு, குறிப்பாக கிராமப்புறங்களில், குறைந்தவட்டியில் கடன் எளிதாக கிடைப்பதை உறுதி செய்வது, அடிமட்ட அளவில் வேலை உருவாக்கத்தை ஊக்குவிக்கும்.
3. வேலை உருவாக்கத்திற்கான முக்கிய துறைகளை வலுப்படுத்துதல்:
உற்பத்தி மறுமலர்ச்சி: உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க “மேக் இன் இந்தியா” போன்ற முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும், இது குறிப்பாக அரைகுறையான திறமையுடைய தொழிலாளர்களுக்கு குறிப்பிடத்தக்க வேலை உருவாக்குநராக இருக்கும்,
வேளாண்மையை நவீனமயமாக்கல், பல்வகைப்படுத்தல்: தற்போது வேளாண்மைதுறையானது உடலுழைப்புடனான பணியாளர்களில் பெரும் பங்கைப் பயன்படுத்திகொள்கிறது என்றாலும், அதன் உற்பத்தித்திறனை மேம்படுத்த வேண்டும். வேளாண் பதப்படுத்தும் தொழில்களை ஊக்குவிப்பதும், தோட்டக்கலை , கால்நடை வளர்ப்பு போன்ற உயர் மதிப்புள்ள வேளாண்மை நடவடிக்கைகளில் பல்வகைப்படுத்துவதும் கிராமப்புற வருமானத்தை அதிகரிக்கவும் அதிக வேலைகளை உருவாக்கவும் உதவும்.

உள்கட்டமைப்பு மேம்பாடு: பெரிய அளவிலான உள்கட்டமைப்பு திட்டங்களில் (சாலைகள், ரயில்வே, திறன்மிகு நகரங்கள்) தொடர்ச்சியான முதலீடு செய்வது கட்டுமானம், தளவாடங்கள் , என்பனபோன்ற தொடர்புடைய துறைகளில் நேரடியாகவும் மறைமுகவும் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. hidden unemployment in India
4. முறைசாரா துறையை முறைப்படுத்துதல் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்துதல்:
தொழிலாளர்நல கொள்கைகளில் தலையீடுகள்: முறைசாரா துறையை படிப்படியாக முறைப்படுத்துவதற்கான கொள்கைகளை செயல்படுத்துதல், தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு சலுகைகள், குறைந்தபட்ச ஊதியங்கள், சிறந்த வேலை நிலைமைகளை வழங்குதல் ஆகியவை அவர்களின் நல்வாழ்விற்கும் பொருளாதாரத்திற்கும் மிக முக்கியமானவைகளாகும்.
நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டங்கள்: மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் (MGNREGA) போன்ற திட்டங்களின் நகர்ப்புற பதிப்புகளை ஆராய்வது நகர்ப்புற ஏழைகளுக்கு பாதுகாப்பு வலையையும் வருமானத்தையும் வழங்குவதோடு, பொது சொத்துக்களையும் உருவாக்கும்.
5. அரசாங்க முயற்சிகளின், கொள்கைகளின் ஆதரவு:
தேசிய வேலைவாய்ப்புக் கொள்கை (NEP): மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைத் தாண்டி, வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் வெளிப்படையாக கவனம் செலுத்துகின்ற ஒரு முழுமையான NEP தேவையாகும். இதில் தேவைகளின்-பக்கம் (எ.கா., பொது வேலைவாய்ப்பு உருவாக்கம்) , விநியோகங்களின்-பக்கம் (எ.கா., திறன் மேம்பாடு, கல்வித் தரம்) ஆகிய இரண்டு கூறுகளும் இருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவித்தல்: முதலாளிகள் தங்கள் வருங்கால வைப்பு நிதி பங்களிப்புகளுக்கு மானியம் வழங்குவதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க ஊக்குவிக்கும் பிரதான் மந்திரி ரோஜ்கர் புரோட்சஹான் யோஜனா (PMRPY) போன்ற திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு திறம்பட செயல்படுத்தப்பட வேண்டும்.
பொது-தனியார் கூட்டாண்மைகள் (Public-Private Partnerships (PPPs): திறன் மேம்பாடு, உள்கட்டமைப்பு, தொழில்துறை மேம்பாட்டில் PPPகளை ஊக்குவித்தல், தனியார் துறையின் செயல்திறனையும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான முதலீட்டையும் மேம்படுத்துதல்.
6. வேலைவாய்ப்பில் பாலின ஏற்றத்தாழ்வுகளை சரி செய்தல்:

பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்: பெண்களின் தேவைகளுக்கு ஏற்ப திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், நெகிழ்வான பணி ஏற்பாடுகளை ஊக்குவித்தல், பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்தல் உள்ளிட்ட பெண்களின் தொழிலாளர் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான குறிப்பிட்ட முயற்சிகள் அவசியமாகும். மிஷன் சக்தி, DAY-NRLM போன்ற திட்டங்கள் ஆகியன நேர்மறையான படிகளாகும்.
நிதி உதவி: பெண்களுக்கான நிதிஉதவியை மேம்படுத்துதல், ஸ்டாண்ட்-அப் இந்தியா போன்ற திட்டங்களின் மூலம் அவர்களின் தொழில்முனைவோரை ஊக்குவித்தல் குறிப்பிடத்தக்க பொருளாதார ஆற்றலை உயர்த்தும். hidden unemployment in India
முடிவாக
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை எனும் பிரச்சனை மிகவும் சிக்கலானது, இது மக்கள் தொகை, கட்டமைப்பு, தொழில்நுட்பம் ஆகிய காரணிகளால் உருவாகிறது. இருப்பினும், ஒருங்கிணைந்த முயற்சியுடன், நமதுநாடு அதன் மக்கள்தொகையை பொருளாதார வளர்ச்சிக்கான சக்திவாய்ந்த வளமாக மாற்ற முடியும்.
தரமான கல்வி, தொடர்புடைய திறன் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், துடிப்பான தொழில்முனைவோர் சூழல் அமைப்பை வளர்ப்பதன் மூலம், வேலை உருவாக்கும் துறைகளில் முதலீடு செய்வதன் மூலம், முறைசாரா பொருளாதாரத்தை முறைப்படுத்துவதன் மூலம், ஒவ்வொரு தனிநபரும் நாட்டின் முன்னேற்றத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவும், வளமான வாழ்வாதாரத்தைப் பெறவும் வாய்ப்புள்ள எதிர்காலத்தை நோக்கி இந்தியா நகர முடியும்.
இதுவே தற்போது பொருளாதார வளர்ச்சியுடன் அனைவரையும் உள்ளடக்கிய வேலைவாய்ப்பாக மாறுவதை உறுதி செய்வதற்கு சரியானதொரு ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கான நேரமாகும் .