இந்தியாவில் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை குறைவு: புதிய தரவுகள் வெளியீடு!

Published On:

| By Selvam

இந்தியாவின் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 2023-24 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் குறைந்துள்ளதாக தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு (என்எஸ்எஸ்ஓ) பிப்ரவரி 18 வெளியிட்ட தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. India Urban Job vacancy

இந்த ஆய்வுக்காக நகர்ப்புற சட்ட கணக்கெடுப்பின் கீழ் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் நகர்ப்புற இந்தியாவில் 5,742 மாதிரி அலகுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது 45,074 வீடுகள் மற்றும் 1,70,487 தனிநபர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

ADVERTISEMENT

இந்த ஆய்வின் படி, கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோருக்கான நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.4 சதவீதமாக உள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் இது 6.5 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது சிறிதளவு குறைவடைந்துள்ளது. 

நகர்ப்புற வேலைவாய்ப்பின்மையின் முந்தைய காலாண்டான ஜூலை – செப்டம்பர் 2023 நிலவரத்துடன் ஒப்பிடுகையில், அதே 6.4 சதவீதமாகவே தென்படுகிறது. இதனால் வேலைவாய்ப்பின் நிலை முன்னேற்ற பாதையில் தொடர்கிறது எனக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

பெண்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் 8.1 சதவீதமாக குறைந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 8.6 சதவீதமாக இருந்ததைப் போல், தற்போது சுமார் 0.5 சதவீத குறைவைக் காணலாம். முந்தைய காலாண்டான ஜூலை – செப்டம்பர் 2023-ன் 8.4 சதவீதத்துடன் ஒப்பிடுகையிலும் சிறிதளவு குறைவாகவே உள்ளது.

ஆண்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.8 சதவீதமாக மாறாமல் தொடர்கிறது. 2023-24 நிதியாண்டின் இதே காலாண்டிலும் 5.8 சதவீதமாகவே இருந்த நிலையில், இது முந்தைய காலாண்டான ஜூலை – செப்டம்பரில் 5.7 சதவீதமாக குறைவாக இருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலைமை நகர்ப்புற வேலைவாய்ப்பு சந்தையின் நிலைத்தன்மையை பிரதிபலிக்கிறது. அத்துடன், பெண்கள் மற்றும் ஆண்களின் வேலைவாய்ப்பு விகிதங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் தாக்கத்தைக் காட்டுவதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். இது தொடர்ச்சியான வளர்ச்சி முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதால் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் விரிவடையும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. India Urban Job vacancy

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share