தமிழ்நாடு சட்டமன்றத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் மானியக்கோரிக்கை இன்று (ஜூன் 27) நடைபெற்றது.
இதில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
“சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் உள்ள மாணவர் விடுதி ரூ.25 கோடி மதிப்பீட்டில் உயர் செயல்திறன் விடுதியாக மேம்படுத்தப்படும்.
சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு சார்பாகப் பங்கேற்று வெற்றி பெற்ற 100 விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு 3 சதவிகித விளையாட்டுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணி ஆணை வழங்கப்படும்.
கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ரூ.100 கோடியில் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கப்படும்.
செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூர் அருகே SDAT பிரத்யேக ஒலிம்பிக் Bicycle Motocross (BMX) ஓடுபாதை அமைக்கப்படும்.
ரூ.50 கோடி செலவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிர்வாகத்தின் கீழ் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகங்களும் விளையாட்டு அரங்கங்களும் சீரமைக்கப்படும்.
22 சட்டமன்ற தொகுதிகளில் ரூ.66 கோடி செலவில் சிறு விளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும்.
மதுரை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் அகாடமியில் Driving Pool- உடன் கூடிய ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளம் அமைக்கப்படும்.
ரூ.10 கோடியில் மாணவர்கள், மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து மாவட்ட விளையாட்டு வளாகங்களிலும் உள்ள உடற்பயிற்சி கூடங்கள் குளிர்சாதன வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.
அரியலூர், திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் தற்போதுள்ள ஹாக்கி ஆடுகளம் செயற்கை இழை ஆடுகளமாக தரம் உயர்த்தப்படும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழர் பாரம்பரியத் தற்காப்புக் கலைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு வீரர்களின் செயல்திறனை அறிவியல் பூர்வமாக மதிப்பீடு செய்ய Athlete Management System (AMS) எனும் மென்பொருள் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாமக எம்.எல்.ஏ.வின் கோரிக்கை : உடனே ஏற்ற முதல்வர்!
ரூ.1,185 கோடியில் மகளிர் வேலைவாய்ப்பு திட்டங்கள்: உதயநிதி அறிவிப்பு!