நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரனுக்கு இருதயத்தில் ஸ்டெண்ட் பொறுத்தப்பட்டுள்ளது. Udayachandran needs a stent in his heart
கடும் வேலைப்பளு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் கடந்த வாரம் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்துகொண்டார்.
அப்போது அவருக்கு இருதயத்தில் சிறிய அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தநிலையில் சிகிச்சைக்காக இன்று (ஜூன் 26) அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டு, இருதய அறுவை சிகிச்சை நிபுணர் செங்குட்டுவேல் ஸ்டெண்ட் பொறுத்தினார்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு கார்டியோ ஐசியு வார்டுக்கு மாற்றப்பட்ட நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார்.
அவர் தற்போது நலமாக இருக்கிறார் என்றும் ஓரிரு மணி நேரங்களுக்கு பிறகு அறை எண் 74க்கு மாற்றப்படுவார் என்றும் அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகின்றன. Udayachandran needs a stent in his heart