திருப்புவனத்தில் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்திக்க தவெக தலைவர் விஜய் புறப்பட்டு சென்றுகொண்டிருக்கிறார். tvk vijay on the way to thirupuvanam
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் காவல்துறையினரின் தாக்குதலால் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் போலீசாருக்கும், தமிழக அரசுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. தொடர்ந்து வழக்கு சிபிஐ விசாரணைக்க முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்தார்.
இந்தநிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் போனிலும் நேரில் சென்றும் அஜித்குமாரின் அம்மாவுக்கும் தம்பிக்கும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
விசிக தலைவர் திருமாவளவன் இன்று நேரில் சென்றார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொலைப்பேசி வாயிலாக பேசினார்.
இந்தநிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தற்போது அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்திக்க திருப்புவனம் புறப்பட்டு சென்றுகொண்டிருக்கிறார். காவல்துறைக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லையாம்.
முன்னதாக காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து தவெக ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தது. சிவானந்தா சாலையில் வரும் 06.07.2025 ஞாயிறு அன்று காலை 10.00 மணிக்குக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. tvk vijay on the way to thirupuvanam