சேலத்துக்கு சென்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசார பேருந்து நூலிழையில் விபத்தில் இருந்து தப்பியது.
சேலத்தில் தவெக நிர்வாகிகளிடையே விஜய் இன்று பேசுகிறார். இந்தக் கூட்டத்தில் 5,000 நிர்வாகிகள் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
விஜய் வழக்கம் போல தமது பிரசார பேருந்தின் மீது நின்று நிர்வாகிகளிடையே பேச இருக்கிறார். இதற்காக விஜய்யின் பிரசார பேருந்து நேற்று சேலம் சென்றடைந்தது.
இந்த பிரசார பேருந்தை வழிமறுத்து தவெகவினர் பூஜைகள் மற்றும் வழிபாடு செய்தனர். சாலையின் நடுவே தவெகவினர் பிரசார பேருந்தை வழிமறிக்க காத்திருப்பதை பார்த்த ஓட்டுநர் மெதுவாக சாலை ஓரமாக பேருந்தை திருப்பினார்.
அப்போது எதிர்பாராதவிதமாக டெம்போ வண்டி மீது விஜய் பேருந்து மோத இருந்தது. ஆனால் தவெகவினர் கூச்சலிட்டதால் ஓட்டுநர் லாவகமாக பேருந்தை நிறுத்தினார். இதனால் நூலிழையில் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
