சேலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமது கட்சி நிர்வாகிகளை இன்று பிப்ரவரி 13-ந் தேதி சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்புக்கு 5,000 பேரை மட்டும் போலீசார் அனுமதித்துள்ளனர்.
கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து ஈரோட்டில் அண்மையில் விஜய் பிரசாரம் செய்தார். இதனைத் தொடர்ந்து சேலம் சீலநாயக்கன்பட்டியில் இன்று தவெக நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெறுகிறது. திறந்தவெளி பொதுக் கூட்டமாக நடைபெறும் இதில் 5,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் பங்கேற்க அனுமதி கொடுக்கப்படவில்லை. மேலும் இதில் பங்கேற்பவர்கள் அனைவருக்கும் அனுமதிச் சீட்டும் வழங்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் சேலம் செல்கிறார் விஜய். பின்னர் கூட்டம் முடிவடைந்ததும் அதே தனி விமானத்தில் அவர் சென்னை திரும்புகிறார். இந்நிகழ்ச்சிக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
