திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி விலகுவதாக அறிவித்துள்ளது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மார்ச் 22-ந் தேதி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துரைமுருகன் அளித்த பதில்கள்:
செய்தியாளர்: தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன், திமுக கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்காரு, இதை எப்படிப் பார்க்குறீங்க சார்?
துரைமுருகன்: நான் எப்படிப் பார்ப்பேன்? அப்படிப் பார்ப்பேன். (சிரிக்கிறார்)
செய்தியாளர்: வேல்முருகன் 10 கோரிக்கைகள் கொடுத்தாராம், அந்தக் கோரிக்கைகள் எல்லாம் பரிசீலனை பண்ணல, அதனால வெளியே போறேன்னு சொல்லியிருக்காரு. அதே மாதிரி ஆட்சி வந்து அதிகாரிகளின் ஆட்சியா இருக்கு அப்படின்னு ஒரு குற்றச்சாட்டை வைக்கிறாரு. அதனால அதிகாரிகள் தான் என்னை வெளியேற்றிட்டாங்க அப்படின்னு சொல்றாரு வேல்முருகன்..
துரைமுருகன்: போகும்போது அப்படிச் சொல்லாம, ‘நல்ல ஆட்சி, நான் போயிட்டு வர்றேன்’னா சொல்லுவாங்க? ஒரு கட்சியை விட்டு வெளியேறறார்னா, ‘ஆட்சி சரியில்லை’ன்னு சொல்லிட்டுத்தான் போவாங்க. ‘ரொம்ப நல்ல ஆட்சி, நான் வெளியே போறேன்’னு சொல்ல மாட்டாங்க இல்லையா? அதனால வழக்கமா சொல்றதுதான், அவ்வளவுதான்.
செய்தியாளர்: வேல்முருகனிடம் திரும்பவும் பேச்சுவார்த்தை நடத்தப்படுமா சார்? கூட்டணியில திரும்பக் கொண்டு வர்றதுக்கு?
துரைமுருகன்: எனக்கு அந்தப் பேச்சுவார்த்தை நடத்துறது எல்லாம் சப்ஜெக்ட் இல்ல. அதனால என்னை விட்ருங்க. இவ்வாறு துரைமுருகன் கூறினார்.
