கரூர் சம்பவம் தொடர்பாக நீதிபதி மீது அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தவெக திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி நடிகர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக கட்சி மற்றும் விஜய் மீது நீதிபதி கடுமையான கருத்துக்களை முன் வைத்தார்.
இதைத் தொடர்ந்து தவெகவை விமர்சித்த நீதிபதி குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக புகார் எழுந்தது. இதில் தவெக திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அவர் ஜாமின் கேட்டு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் நிர்மல் குமாருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.