ADVERTISEMENT

ஈரான் அமைதி பாதைக்கு திரும்பாவிட்டால் பேரழிவுதான்: டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை

Published On:

| By Minnambalam Desk

Trump Iran

ஈரானின் அணுசக்தி செறிவூட்டும் நிலையங்களை அமெரிக்கா விமானப் படை அழித்துவிட்டது; இனியும் ஈரான் அமைதிப் பாதைக்கு திரும்பாவிட்டால் பேரழிவுதான் ஏற்படும் என்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். Trump’s Open Warning Iran
ஈரானின் 3 முக்கியமான அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்காவின் போர் விமானங்கள் திடீர் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை சமூக வலைதளங்களில் அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் மக்களுக்கு டொனால்ட் டிரம்ப் ஆற்றிய உரை: ஈரானின் அணுசக்தி செறிவூட்டும் திறனை அழிப்பதும் உலகின் அரச பயங்கரவாத நாடுகளில் முதலிடம் வகிக்கும் ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை தடுத்து நிறுத்துவதும்தான் அமெரிக்காவின் இலக்கு.

ADVERTISEMENT

ஈரானின் அணுசக்தி செறிவூட்டும் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி முழுவதுமாக அழித்துவிட்டது

மத்திய கிழக்கு நாடுகளின் தாதாவாக ஈரான் இருந்து வருகிறது. தற்போது அமைதியை உருவாக்க வேண்டும். அப்படி அமைதி முயற்சிக்கு ஈரான் திரும்பாவிட்டால் எதிர்காலத்தில் மிகப் பெரிய தாக்குதல்கள் நடத்த நேரிடும்; ஈரானில் பேரழிவுதான் நிகழும்.

ADVERTISEMENT
President Trump Delivers Address to the Nation, June 21, 2025

40 ஆண்டுகளாக இஸ்ரேல், அமெரிக்கா நாட்டு மக்களை கொன்று வருகிறது ஈரான். இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் மரணம் என கொக்கரித்தது ஈரான். இஸ்ரேல், அமெரிக்கா நாட்டு மக்கள் எத்தனை எத்தனையோ பேரை படுகொலை செய்துள்ளது ஈரான்.

ஈரான் புரட்சி காவல் படை தளபதி சொலேமனி தலைமையிலான ராணுவம், பலரையும் கொன்று குவித்தது. நீண்ட காலத்துக்கு முன்னரே இது நீடிக்கக் கூடாது என முடிவெடுத்துவிட்டேன்.

ADVERTISEMENT

ஈரான் மீது இன்று இரவு தாக்குதல் நடத்திய அமெரிக்காவின் தேசபக்தர்களுக்கு என் வாழ்த்துகள். இவ்வாறு டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share