மோடியுடன் தொலைபேசியில் டிரம்ப் பேச்சு! வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு விருந்து!

Published On:

| By Minnambalam Desk

US Pakistan

பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிருக்கு வெள்ளை மாளிகையில் விருந்து அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Trump Speaks with Modi Over Phone; White House Hosts Pakistani Army Chief for Dinner

கனடாவில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த மாநாட்டைத் தொடர்ந்து பிரதமர் மோடி, அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் தொலைபேசியில் பேசினார். இந்த பேச்சின் போது, ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை குறித்து விவரித்தார் பிரதமர் மோடி. மேலும் பாகிஸ்தான் விவகாரத்தில் எந்த ஒருநாட்டின் தலையீட்டையும் இந்தியா அனுமதிக்காது என்றும் பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறினார்.

இந்த நிலையில் அமெரிக்காவுக்கு 5 நாட்கள் பயணமாக பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர் சென்றுள்ளார். அமெரிக்கா அதிபரின் வெள்ளை மாளிகையில் அசிம் முனிருக்கு டொனால்ட் டிரம்ப் நண்பகல் விருந்து அளித்தார்.

இந்தியா- பாகிஸ்தான் மோதல்; ஈரான் – இஸ்ரேல் போர்ச் சூழலில் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிஅர், அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருப்பது மிக முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது. ஈரானை முழுமையாக ஆதரிக்கிறது பாகிஸ்தான். ஈரானை அழித்துவிடும் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை அமெரிக்கா ஆதரிக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ தளபதியை அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தித்து பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share