மாணவர்களே ரெடியா.. தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

exam

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதியை இன்று (நவம்பர் 4) அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அந்த வகையில் தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 2026ம் ஆண்டு மார்ச் 2ம்தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடை பெற உள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு 2026ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி நிறைவடைய உள்ளது.

இந்த ஆண்டு முதல் முறையாக கணக்கு பதிவியல் தேர்வுக்கு கால்குலோட்டர் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
10 ம் வகுப்பு தேர்வு அட்டவணை
12ம் வகுப்பு தேர்வு அட்டவணை
தேர்வு விபரங்கள்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share