திமுக எம்.பி.டி.ஆர் பாலுவின் மனைவியும், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி இன்று (ஆகஸ்ட் 19) காலமானார்.
திமுக பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலுவின் மனைவியும்,தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி, நுரையீரல் பாதிப்பு காரணமாக கடந்த 8 மாதங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
குறிப்பாக கடந்த ஒரு மாதமாக தொடர் சிகிச்சையில் இருந்த ரேணுகா தேவி இன்று (ஆகஸ்ட் 19) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள ரேணுகா தேவியின் உடலுக்கு இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளது.