ரயில் பயணங்களின் போது தற்போது 4 மணி நேரத்துக்கு முன்னதாக பயணிகளின் விவரங்கள் அடங்கிய Chart வெளியிடப்படுகிறது. இனி இது 8 மணி நேரத்துக்கு முன்னரே வெளியிடப்படும். Train Charts
இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளதாவது: இந்திய ரயில்வேயானது முழுமையான, சிறந்த பயண அனுபவத்தைப் பயணிகளுக்கு வழங்க உறுதிபூண்டுள்ளது. ரயில்வேயுடன் ஒரு பயணியின் பயணமானது, பயணச் சீட்டு முன்பதிவில் தொடங்குகிறது. முன்பதிவை எளிதாக்க ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் இந்த சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார். பயணச் சீட்டு முறை நவீனமாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தற்போது,
ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு முன்பதிவு பயணிகள் அட்டவணை தயாரிக்கப்படுகிறது. இது பயணிகளின் மனதில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகிறது. இந்த நிச்சயமற்ற தன்மை சிக்கல்களை ஏற்படுத்தும். இனி,
- ரயில் புறப்படுவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பே இறுதிப் பயணிகள் அட்டவணையைத் தயாரிக்க (CHART) ரயில்வே வாரியம் ஆலோசனை வழங்கியுள்ளது.
- பகல் 1 மணிக்கு முன் புறப்படும் ரயில்களுக்கு, முந்தைய நாள் இரவு 9 மணிக்கே பயணிகள் அட்டவணைப் பட்டியல் தயாரிக்கப்படும்.
- இந்த நடவடிக்கை காத்திருப்புப் பட்டியல் பயணச்சீட்டைக் கொண்ட பயணிகளுக்கான நிச்சயமற்ற தன்மையைக் குறைக்கும்.
- காத்திருப்புப் பட்டியல் (Waiting List) நிலை குறித்த தகவல் புதுப்பிப்பை பயணிகள் முன்கூட்டியே பெறுவார்கள்.
- தொலைதூர இடங்கள் அல்லது முக்கிய நகரங்களின் புறநகர்ப் பகுதிகளிலிருந்து நீண்ட தூர ரயில்களைப் பிடிக்கும் பயணிகளுக்கு இது பயனளிக்கும். – – காத்திருப்புப் பட்டியல் உறுதிப்படுத்தப்படாவிட்டால் மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்வதற்கு இது அதிக நேரத்தை வழங்கும்.
தட்கல் முன்பதிவுகளுக்கான அங்கீகார வழிமுறையை விரிவுபடுத்துமாறு ரயில்வே அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆதார் அல்லது பயனரின் டிஜிலாக்கர் கணக்கில் கிடைக்கும் வேறு ஏதேனும் சரிபார்க்கக்கூடிய அரசு அடையாள அட்டையைப் பயன்படுத்தி அங்கீகாரம் செய்யப்பட வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் ரயில்வே சேவைகளை நவீனமயமாக்குவதற்கும் அவற்றை மக்களுக்கு ஏற்றதாக மாற்றுவதற்கும் ரயில்வே துறையின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பிரதிபலிக்கின்றன.