தேர்தல் பிரச்சாரம்!
திமுக தலைவர் ஸ்டாலின் – சேலம், கள்ளக்குறிச்சி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – புதுச்சேரி, கடலூர்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் – சேலம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை – சிதம்பரம், நாகை, தஞ்சை, பெரம்பலூர்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் – கிருஷ்ணகிரி, தருமபுரி
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – தூத்துக்குடி, ராமநாதபுரம்
காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!
ரூ.1,823 கோடி அபராதம் செலுத்தக்கோரி வருமான வரித்துறை காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து இன்று (மார்ச் 30) நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
வேட்புமனு இறுதிப்பட்டியல்!
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு இறுதிப்பட்டியல் இன்று மாலை வெளியாக உள்ளது.
சார்பதிவாளர் அலுவலகங்கள்!
நிதியாண்டின் இறுதி நாளான இன்று சார்பதிவாளர் அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும் என்று பத்திர பதிவுத்துறை அறிவித்துள்ளது.
டேனியல் பாலாஜி காலமானார்!
மாரடைப்பால் காலமான நடிகர் டேனியல் பாலாஜி உடல் ஓட்டேரி மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்படுகிறது.
போக்குவரத்து மாற்றம்!
சென்னை தரமணி, கந்தன்சாவடி பகுதிகளில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் இன்று முதல் ஒரு வாரத்திற்கு ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லக்னோ, பஞ்சாப் மோதல்!
இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் லக்னோ, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
வங்கதேசம், இலங்கை டெஸ்ட் கிரிக்கெட்!
வங்கதேசம், இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 14-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…