பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளில் இருந்து சென்னைக்கு ஏராளமான பயணிகள் நாள்தோறும் மின்சார ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்களுக்கு இந்த மின்சார ரயில்கள் ஒரு வரப்பிரசாதம் போல இருந்து வருகிறது. இந்த நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை மூர் மார்க்கெட்டில் இருந்து பட்டாபிராம், திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளுக்கு செல்லும் மின்சார ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே இன்று (நவம்பர் 4) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால் இன்று (நவம்பர் 4) 8 ரயில்களும், நாளை (நவம்பர் 5) 58 மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. ஆக மொத்தம் இன்றும், நாளையும் 66 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இரவு 11.45க்கு சிறப்பு ரயில்
சென்னை மூர்மார்கெட்டிலிருந்து அரக்கோணத்துக்கு இன்று இரவு 10 மணி, 10.45 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், மறுமார்க்கமாக அரக்கோணத்தில் இருந்து 10.50 மணிக்கு புறப்படும் ரயில், மூர்மார்க்கெட்டிலிருந்து ஆவடிக்கு இரவு 10.20, 11.45 மணிக்கு புறப்படும் ரயில், மூர்மார்கெட்டிலிருந்து திருவள்ளூருக்கு இரவு 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், மூர் மார்க்கெட்டிலிருந்து பட்டாபிராமுக்கு இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரயில் ஆகியவை இன்று ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக மூர் மார்க்கெட்டிலிருந்து இரவு 11.15 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.
இதேபோல, நாளை (நவம்பர் 5) ஞாயிற்றுக் கிழமை அரக்கோணத்திலிருந்து திருத்தணிக்கு காலை 4 மணி, 5.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், சென்னை மூர்மார்கெட்டிலிருந்து திருவள்ளூருக்கு காலை 5 மணி, 5.40, 6.15, 7.45, 8.05, 9.40 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. மறு மார்க்கமாக திருவள்ளூரிலிருந்து மூர் மார்கெட்டிற்கு காலை 4.45, 5.55, 8.05, 8.20, 8.30 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
மூர்மார்கெட்டிலிருந்து பட்டாபிராமுக்கு காலை 5.15, 6.20, 7.15, 7.30 ஆகிய நேரங்களில் புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக பட்டாபிராமிலிருந்து மூர்மார்கெட்டிற்கு காலை 5.30, 6.35, 7.40, 8.40, 8.45 மணிக்கு புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மூர்மார்கெட்டிலிருந்து அரக்கோணத்திற்கு காலை 5.30, மூர்மார்கெட்டிலிருந்து திருவள்ளூருக்கு காலை 5.40, மூர்மார்கெட்டிலிருந்து திருத்தணிக்கு காலை 5.55 மணிக்கு புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
மேலும், சென்னை கடற்கரையிலிருந்து ஆவடிக்கு காலை 6.50, 8.10 மணிக்கு புறப்படும் ரயில், மறுமார்க்கமாக ஆவடியிலிருந்து சென்னை கடற்கரைக்கு காலை 4.10, 4.35, 5.55, 7.05, 7.40, 7.55, 8.45 மணிக்கு புறப்படும் ரயில்கள் ரத்தாகிறது. பயணிகளின் வசதிக்காக நாளை மூர்மார்கெட்டிலிருந்து அரக்கோணத்திற்கு காலை 6.30, 7 மணி, 8.20, 9.10, 9.50 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். மூர்மார்கெட்டிலிருந்து திருவள்ளூருக்கு காலை 4.30, 9.15, 10 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்,” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரயில் பயணிகள் இதற்கு ஏற்றவாறு தங்கள் பயணத் திட்டத்தை அமைத்துக் கொள்வது நல்லது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…