வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்ய இன்று (செப்டம்பர் 16) மட்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்ய ஜூலை 31-ந் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இந்த காலக்கெடு செப்டம்பர் 15-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
ஆனால் பல லட்சக்கணக்கானோர் நேற்று ஒரே நேரத்தில் கணக்குகளைத் தாக்கல் செய்ததால் வருமான வரி இணையதளத்தின் சேவைகள் முடங்கின. இதனால் வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை ஏற்று மத்திய அரசு இன்று (செப்டம்பர் 16) ஒருநாள் மட்டும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய கால அவகாசம் அளித்துள்ளது.
செப்டம்பர் 15-ந் தேதி வரை சுமார் 7.3 கோடி பேர் வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஆண்டு 7.28 கோடி பேர் வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர்.