8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை… சம்பளம் ரூ.50,000 வரை! தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தில் சூப்பர் வாய்ப்பு!

Published On:

| By Santhosh Raj Saravanan

tnsec recruitment 2025 office assistant driver jobs 8th pass

“படிப்பு கம்மியா இருக்கேன்னு கவலைப்படுறீங்களா? 8ஆம் வகுப்பு பாஸ் பண்ணிருந்தாலே போதும், கைநிறைய சம்பளத்தோட ஒரு அரசாங்க வேலை காத்துக்கிட்டு இருக்கு!” தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தில் (TNSEC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பத் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிகளுக்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ADVERTISEMENT

காலியிடங்கள் விவரம்:

மொத்தம் இரண்டு வகையான பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ADVERTISEMENT
  • அலுவலக உதவியாளர் (Office Assistant): அலுவலகப் பணிகளை மேற்கொள்ளத் துடிப்பானவர்கள் தேவை.
  • ஓட்டுநர் (Driver): கனரக அல்லது இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி:

  • அலுவலக உதவியாளர்: 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
  • ஓட்டுநர்: 8ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் (Valid Driving License) மற்றும் முன் அனுபவம் அவசியம்.

வயது வரம்பு:

ADVERTISEMENT

விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி, எம்பிசி, பிசி பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு (Age Relaxation) உண்டு.

சம்பளம் எவ்வளவு?

பதவிக்கு ஏற்றவாறு நல்ல சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

  • அலுவலக உதவியாளர்: ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை (Pay Level 1).
  • ஓட்டுநர்: ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை.

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு கிடையாது! விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் நேர்காணல் (Interview) அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஓட்டுநர் பணிக்கு மட்டும் கூடுதலாக ஓட்டுநர் திறன் தேர்வு (Driving Test) நடைபெறும்.

விண்ணப்பிப்பது எப்படி?

இது ஆஃப்லைன் (Offline) முறை விண்ணப்பம்

  • விண்ணப்பப் படிவத்தைத் தெளிவாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • கல்விச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் (ஓட்டுநர் பணிக்கு) மற்றும் ஆதார் நகல்களை இணைக்க வேண்டும்.
  • பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சரியான முகவரிக்குத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

தம்பிங்களா… 8ஆம் வகுப்புத் தகுதினு சொல்லிட்டாங்கன்னு சும்மா இருக்காதீங்க. 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு ஃபெயில் ஆனவங்க கூட இதுக்கு ட்ரை பண்ணலாம். குறிப்பா டிரைவிங் தெரிஞ்சவங்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. சம்பளம் ஸ்டார்டிங்லயே கௌரவமா கிடைக்குது.

நேர்காணல் மட்டும்தான் நடக்கும்ங்கறதால, கொஞ்சம் ஸ்மார்ட்டா பதில் சொல்லப் பழகிக்கோங்க. அப்ளிகேஷன் ஃபார்ம்ல எந்தத் தப்பும் இல்லாம பாத்துக்கோங்க. கவர்மெண்ட் வேலை கனவு நனவாக வாழ்த்துகள்!

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share