மாவட்ட கல்வி அலுவலர் DEO முதன்மை தேர்வு தேதி மாற்றம்- டிஎன்பிஎஸ்சி

Published On:

| By Mathi

TNPSC DEO

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC நடத்தும் மாவட்ட கல்வி அலுவலர் DEO பதவிகளுக்கான குரூப் 1 சி முதன்மை தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கையில், மாவட்ட கல்வி அலுவலர் (District Educational Officer – Group-IC) பதவிகளுக்கான முதன்மைத் தேர்வுகள்,
முன்பு 12.03.2026 முதல் 15.03.2026 வரை நடைபெறுவதாக இருந்தது. தற்போது இந்த தேர்வுகள் மாற்றியமைக்கப்பட்டு, பின்வரும் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது:

ADVERTISEMENT
  • 22.03.2026 (முற்பகல்): தாள்-I தமிழ் மொழி தகுதித் தேர்வு (பத்தாம் வகுப்புத் தரம்)
  • 23.03.2026 (முற்பகல்): தாள்-II பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்)
  • 24.03.2026 (முற்பகல்): தாள்-III- பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்)
  • 25.03.2026 (முற்பகல்): தாள்-IV- கல்வியியல் (பட்டப்படிப்புத் தரம்) இது கணினி வழித் தேர்வு (CBT) முறையில் நடைபெறும்.

இத்தேர்வுகளுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு- Hall Ticket 12.03.2026-க்குள் (வியாழன்) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share