தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 (TNPSC Group 4) தேர்வு வினாத்தாள் குறித்து தேர்வர்கள் கடும் குமுறலை வெளிப்படுத்தி உள்ளனர். TNPSC Group 4
TNPSC Group 4 தேர்வு, தமிழ்நாடு முழுவதும் ஜூலை 12-ந் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான வினாத்தாள் தேர்வர்களை ரொம்பவே குமுற வைத்துள்ளது.
TNPSC உறுப்பினர் ராஜ் தமது எக்ஸ் பக்கத்தில் (@ARMTNPSC) “12.07.25 அன்று நடந்த குரூப்4 தேர்வில் எந்த கேள்விகள் நீங்கள் பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து எடுக்கப்பட்டதென்று நினைக்கிறீர்களோ, அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து எனது பதிலில் பதிவிடுங்கள்” என கேட்டிருந்தார்.
இதனையடுத்து TNPSC குரூப் 4 தேர்வு எழுதிய தேர்வர்கள் ஸ்கிரீன்ஷாட்டுகளை போஸ்ட் செய்து குமுறலை கொட்டி வருகின்றனர்.

இந்தப் பதிவில் இடம் பெற்றுள்ள சில கருத்துகள்:
@Eedhal_tnpsc: Syllabus இல் உள்ளது தான் அனால் தமிழ் பழமையான மொழி . அகராதி என்ற topic க்கு 100 மேற்ப்பட்ட புத்தகம் உள்ளது 10 லட்சத்துக்கு மேற்பபட்ட சொற்கள் உள்ளன. புலவர்கள் வந்து தேர்வு எழுதினால் கூட 90 கேள்வி விடை அளிக்க முடியாது.
@Anbu_Ajith_: 25questions than easy mathathu ellam out of school college books நீங்க வேணா syllabus la பார்ப்பதெல்லாம் படி னு மாத்திருங்க இல்லனா நீங்க questions edukura tamil ஓலை சுவடிய குடுங்க நாங்களும் படிச்சுக்குறோம்.. நீங்க நெனைக்குற english & தமிழ் இலக்கணம் ஒன்னு இல்லை தமிழ் கடல் போன்றது.

@winxclass: குரூப் 4 வினாக்கள் பாடத்திட்டத்தில் இருந்து தான் வந்துள்ளது. ஆனால் அது பத்தாம் வகுப்பு தரத்தில் இல்லை அதுபோக இப்பொழுது இருக்கும் சமச்சீர் பள்ளி புத்தகத்தில் இல்லை
கேள்விகள் 1920+,1953,1957 ல் புத்தகத்தில் உள்ளது. மாணவர்கள் எப்படி படிப்பார்கள்?
@thavasukumar1: பாடத்திட்டத்தில் இருந்துதான் கேள்வி வந்துள்ளது என்பது எப்படி சரியான பதிலாக உங்களுக்கு தோன்றுகிறது.
அடுத்து வரும் தேர்வுக்கு கல்வெட்டு,செப்பேடு, ஓலைச்சுவடி போன்றவற்றில் இருந்து கேள்விகள் எடுப்பீர்களா? Source book sollunga. பள்ளிப் புத்தகம் தவிர்த்து நாங்கள் வேறு எதை படிக்க?
@satheesh11297: உங்களது கேள்வியே, நாங்கள் சரியாக செய்ததை,நீங்கள் தவறு என்கிறீர்கள் என்பதாக உள்ளது…ஐயா,பாடத்திட்டத்தை விட பாடம் முக்கியம்.5000 ஆண்டு பழமையான தமிழில்,எல்லாமே உண்டு.தமிழ்த்துறை மாணவர்களே சிலவற்றை தான் படிப்பார்கள்.தமிழுக்கு முன்னுரிமை கொடுத்த பின் அதை கடினமாக்குவது முறையல்ல…

@Sumi83351855: பாடத்திட்டத்திற்கு வெளியே கேள்வியே தப்பு.பாடத்திட்டத்தின் படி ,மொத்த தமிழும் படிக்கனும் ஆயுள் முழுக்க படித்தாலும் முடிக்க முடியாது.நாங்க என்ன சொல்ல வரோம்னு உங்களுக்கு புரியலயா? யாருக்குமே தெரியாத மாதிரி கேள்வி கேட்டா அதிர்ஷ்டமே வெல்லும்.
@GuruA19076873: Sir உ. வே. சா ஓலைசுவடியில் இருந்து கேள்வி கேட்டா எப்படி சார் இதெல்லாம் நியாயமா?
@don31karthick: கலை சொற்கள் ஒரு புத்தகத்தில் 15லட்சம் உள்ளது துறை வாரியாக …இதை அறிவது சாத்தியமா…ஒரு முறை படித்தால் கூட 3மாதம் ஆகும்…
@velmurugansuren: தாங்கள் கூறுவது போல் பாடத்திட்டத்திற்கு வெளியில் இருந்து இந்த கேள்வி கேட்கவில்லை ஆனால் தாங்கள் குறிப்பிட்டது பத்தாம் வகுப்பு தரம் ஆனால் பள்ளி புத்தகத்தில் இருந்து கேள்விகள் அதிகமாக கேட்கப்படவில்லை மாறாக வெளியில் இருந்து அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டது.
@prabuk79063717: நாங்கள் பல வருடங்களாக அரசு தேர்வுக்கு படித்து வருகிறோம்.வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நாங்கள் போக வேண்டாமா ? இப்படியே கீழ் மட்ட அளவிலேயே இருந்து எங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டுமா? தமிழ் படித்தால் வாழ முடியாது என்பதை உறுதிப்படுத்த இந்த கேள்விதாளா?
