Group 2, 2 A தேர்வுகள் ரத்து- மறு தேர்வு எப்போது? TNPSC கொடுத்த விளக்கம் என்ன?

Published On:

| By Mathi

TNPSC Exam

Group 2, 2 A தேர்வுகள் ரத்து தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி-TNPSC வெளியிட்ட அறிக்கை: சென்னையில் இன்று 08.02.2026 நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-II மற்றும் IIA பணிகள்) பிரதான தேர்வுகளுக்கான முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறவிருந்த எழுத்துத்தேர்வுகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னையில் 3 மையங்களில் நடத்த இயலவில்லை.

ADVERTISEMENT

எனவே, தேர்வர்கள் நலனை முன்னிட்டு இன்று நடைபெறவிருந்த இரண்டு தேர்வுகளும் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டு பின்னர் வேறு தேதியில் நடத்தப்படும்.

இது குறித்து தேர்வர்கள் அனைவருக்கும் மறுதேர்வு நடைபெறும் நாளுக்கு 15 தினங்களுக்கு முன்பாக தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு விவரம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (E-Mail) மூலம் தகவல் அளிக்கப்படும்.

ADVERTISEMENT

எதிர்வரும் 22.02.2026 முற்பகல் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-II பணிகள்) பொது அறிவுத் தேர்வு (தாள்-II) (Descriptive Type) அன்றைய தினமே நடத்தப்படும். இது தொடர்பாக தேர்வர்களுக்கு மீண்டும் சரிபார்த்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (Hall Ticket) மீண்டும் 13.02.2026 அன்று வழங்கப்படும். இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share