தேர்வு மையங்களில் குளறுபடி.. TNPSC Group 2, 2A முதன்மை தேர்வுகள் ஒத்திவைப்பு!

Published On:

| By Mathi

TNPSC exam

தேர்வு மைய குளறுபடிகளால் இன்று பிப்ரவரி 8-ந் தேதி நடைபெற இருந்த TNPSC Group 2, 2A முதன்மைத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் TNPSC Group 2, 2A முதன்மைத் தேர்வுகள் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்வு மையங்களுக்கு சென்ற தேர்வர்களுக்கு அந்த மையங்களில் தங்களது தேர்வு எண்கள் இல்லாதது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

இதனையடுத்து சரியான தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் சென்னை அரும்பாக்கத்தில் தேர்வர்கள், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும் நந்தனம் உள்ளிட்ட தேர்வு மையங்களில் தேர்வு தொடங்கிய நேரமான 9 மணியை கடந்தும் வினாத்தாள் வரவில்லை என்ற புகாரும் எழுந்தது.

இதனையடுத்து இன்று நடைபெற இருந்த TNPSC Group 2, 2A முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக TNPSC தலைவர் பிரபாகரன் அறிவித்துள்ளார். மேலும், புதிய தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share