9-வது டிஎன்பிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை திருப்பூர் தமிழன்ஸ் அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. TNPL Tiruppur Tamizhans Dindigul Dragons
டிஎன்பிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டி திண்டுக்கல் நத்தம் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் ஜூலை 6-ந் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் கேப்டன் ரவிச்சந்திரன், பவுலிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்களைக் குவித்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கார்த்திக் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
221 ரன்கள் எடுத்தால் சாம்பியன் பட்டம் என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்டிங் செய்ய தொடங்கியது. ஆனால் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியை கொடுத்தனர். திருப்பூர் தமிழன்ஸ் அணியின் அபார பந்து வீச்சில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சுருண்டது. 14.4 ஓவர்களில் 102 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் பரிதாபமாக பறி கொடுத்தது.

இதனால் திருப்பூர் தமிழன்ஸ் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றனர்.